செம பிரேக்கிங்....கொரோனா கட்டுப்பாடு ஆர்ஆர்ஆர் பட ம் ரிலீஸ் ஏப்ரலுக்கு தள்ளிப்போகிறது

ஐதராபாத் : ராஜமெளலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Jr.NTR -கு Time Sense இல்லை Rajamouli Speech in RRR grand Pre-Release event

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி என பான் இந்தியன் நடிகர்கள் நடித்துள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். இரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சுமார் 400 கோடி பட்ஜெட் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 7 ரிலீஸ்

ஜனவரி 7 ரிலீஸ்

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7 ம் தேதி ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மிக பிரம்மாண்ட படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்காக முக்கிய நகரங்களில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. டிசம்பர் 30 ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக இந்த விழா நடத்தப்பட்டது.

ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து

ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து

அதே சமயம் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஐதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால், ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளி போகலாம், அப்படி ரிலீஸ் செய்தால் அது படத்தின் வசூலை பாதிக்கும் என கூறப்பட்டு வந்தது.

ரிலீஸ் தள்ளிவைப்பு

ரிலீஸ் தள்ளிவைப்பு

ஆனால் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படவில்லை. திட்டமிட்டபடி தியேட்டர்களில் ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டு விட்டன.

இது தான் காரணமா

இது தான் காரணமா

தமிழகத்தில் மீண்டும் தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

டிரெண்டிங்கில் ஆர்ஆர்ஆர்

டிரெண்டிங்கில் ஆர்ஆர்ஆர்

இந்நிலையில் இன்று ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைய வைத்துள்ளது. ஆர்ஆர்ஆர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து #POSTPONED, #RRR, #RRRrelease ஆகிய ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X