twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    25வது நாளை எட்டிய கமலின் விக்ரம்...நேற்று வரை மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா ?

    |

    சென்னை : விக்ரம் படம் ரிலீசாகி இன்றுடன் 25 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இதனை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். படத்தின் வசூலையும் கொண்டாடி வருகின்றனர்.

    Recommended Video

    Vikram படம் BlockBuster-க்கும் மேல! Devi Sri Prasad | Kamal Haasan *Kollywood | Filmibeat Tamil

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3ம் தேதி ரிலீசானது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு 1986 ம் ஆண்டு கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தின் டைட்டிலையே பயன்படுத்தினர்.

    கமல் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் படம், அதுவும் அவரின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என படத்தின் ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியத்தை ஏற்டுத்தி, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.

    என்னங்க இப்படி இருக்கீங்க...சூர்யாவையே மிரள வைத்த மாதவன்...அப்படி செய்திருக்கிறார் பாருங்க என்னங்க இப்படி இருக்கீங்க...சூர்யாவையே மிரள வைத்த மாதவன்...அப்படி செய்திருக்கிறார் பாருங்க

    400 கோடியை கடந்த விக்ரம்

    400 கோடியை கடந்த விக்ரம்

    விக்ரம் படம் ஏற்கனவே பல இளம் நடிகர்களின் வசூல் சாதனையை முறியத்து விட்டது. 400 கோடி கிளப்பில் இணைந்து விட்டது. சமீப நாட்களில் எந்த ஒரு தென்னிந்திய படமும் செய்யாத அளவிற்கு வசூல் சாதனையை விக்ரம் பெற்றுள்ளது. கேரளாவில் மலையாளத்தில் டாப் நடிகர்களின் படங்கள் கூட விக்ரம் அளவிற்கு கலெக்ஷன் பார்க்கவில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகரும், டைரக்டருமான ப்ருத்விராஜே கூறி உள்ளார்.

    25 நாட்களில் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா

    25 நாட்களில் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா

    விக்ரம் படம் ரிலீசாகி 24 வது நாளான நேற்று வரை இந்த படம் உலகம் முழுவதும் ரூ.418 கோடிகளை வசூல் செய்துள்ளது. விக்ரம் இந்தி வெர்சனுக்கு விக்ரம் ஹிட்லிஸ்ட் என பெயர் வைத்துள்ளனர். ரூ.2.3 கோடிக்கு விற்கப்பட்ட விக்ரம் ஹிட்லிஸ்ட் தற்போது 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதில் விநியோகஸ்தர் பங்கு மட்டும் குறைந்தது ரூ.5 கோடி கிடைத்திருக்கும். இந்தியிலும் விநியோகஸ்தர்களுக்கு 100 சதவீதம் லாபம் கிடைத்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதிகம் வசூலித்த 2வது தமிழ் படம்

    அதிகம் வசூலித்த 2வது தமிழ் படம்

    ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு உலகம் அளவில் அதிகம் வசூல் செய்த ஒரே படம் விக்ரம் தான். ஞாயிற்றுக்கிழமை வரை 400 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த 24 நாட்களில் விக்ரம், 418 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.இந்தியாவில் மட்டும் விக்ரமின் வசூல் 294 கோடியை கடந்து விட்டது. விரைவில் இந்திய அளவில் 300 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டில் விக்ரம் இணைய உள்ளது.

    மாநில வாரியாக வசூல் விபரம்

    மாநில வாரியாக வசூல் விபரம்

    உலக அளவில் 124 கோடிகளை வசூலித்த விக்ரம் தமிழகத்தில் மட்டும் 176 கோடிகளை வசூல் செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 38 கோடி, கர்நாடகாவில் 24.5 கோடி, கேரளாவில் 39 கோடி என வசூல் செய்துள்ளது விக்ரம் படம். கேரளாவில் தமிழ் படம் ஒன்று இந்த அளவிற்கு ரசிர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது அனைவரையும் அசர வைத்துள்ளது.

    விக்ரம் அடுத்து செய்ய போகும் சாதனை

    விக்ரம் அடுத்து செய்ய போகும் சாதனை

    விரைவில் இந்திய அளவில் 300 கோடி, தமிழகத்தில் 200 கோடி வசூல் கிளப்பில் விக்ரம் இணைய உள்ளது. இனி வரும் நாட்களில் இன்னும் என்னவெல்லாம் சாதனையை விக்ரம் படம் நிகழ்த்த போகிறது என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர். இதே போல் 50 வது நாளில் எத்தனை கோடி வசூல், 100வது நாளில் எத்தனை கோடி வசூலை விக்ரம் படம் பெறும் என பார்க்க இந்திய சினிமாவே காத்துக் கொண்டிருக்கிறது.

    English summary
    Today Kamal's Vikram reached 25th day of theatrical release. Still now Vikram movie collects Rs.418 crore worldwide. Tamilnadu alone it collects 176 crore and Indian 294 crore. So all are expecting that Vikram will soon cross the line 300 crore in India and 200 crore in tamilnadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X