ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கினது தெரியும்... இந்த விஷயம் தெரியுமா?
சென்னை : இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்திய அளவில் பெருமை சேர்த்துள்ளார்.
இன்றைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்கார் மேடையில் அவர் எதிர்கொண்ட போட்டியாளர்கள் குறித்து தற்போது காணலாம்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்
இசைப்புயல் என்ற தனது பெயருக்கு ஏற்றாற்போல புயலாகவே தனது கேரியரை தமிழில் துவக்கி தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சூறாவளியாய் பறந்து பறந்து இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான்.

உயரிய விருது
ஆஸ்கார் என்பது திரையுலகின் மிக உயரிய விருதாக கௌரவமாக கருதப்படும் நிலையில் அந்த விருதை இரண்டாக பெற்றுதமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார் ரஹ்மான். ஆஸ்கார் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமையை தேடித் தந்தார்.

கடினமான போட்டி
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தந்து வரும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு இந்த விருதுகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பெரிய அளவிலான இசையமைப்பாளர்களுடன் போட்டியிட்டே அவர் பெற்றுள்ளார்.

கடினமான போட்டியாளர்கள்
பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் பெஸ்ட் ஒரிஜினல் பாடல் என்ற இரண்டு பிரிவுகளில் ஏஆர் ரஹ்மான் இந்த விருதுகளை பெற்றுள்ளது தெரிந்த விஷயம்தான். ஹாரி பார்ட்டர் படத்திற்கு இசையமைத்த அலெக்சாண்டர், ஜேம்ஸ் நியூட்டன், தாமஸ் நியூமேன், டானி எல்ப்மேன் உள்ளிட்ட உலக அளவிலான இசையமைப்பாளர்களுடன் போட்டியிட்டே ஏஆர் ரஹ்மான் இந்த விருதுகளை பெற்றுள்ளார்.
இந்தியாவிற்கு பெருமை
காஸ்ட்யூம் டிசைனர் அத்தையா முன்னதாக ஆஸ்கார் விருதை பெற்றுள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்லம் டாக் மில்லியனருக்காக இந்த விருதுகளை ஏஆர் ரஹ்மான் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.


Click it and Unblock the Notifications











