நயன்தாரா ஆர்மி களமிறங்கிட்டாங்க.. சமந்தா ஆர்மியை காணோமே.. ட்விட்டரை தெறிக்கவிடும்
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நாளை (ஏப்ரல் 28) வெளியாகிறது.
நானும் ரவுடி தான் கூட்டணியில், கூடுதலாக சமந்தா இணைந்திருப்பது போல இந்த படம் இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் ஏகப்பட்ட காமெடி காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

பேட்டி கொடுக்கல
நெற்றிக்கண் படத்திற்கு விஜய் டிவியில் பிரத்யேகமாக டிடி ஷோவில் நயன்தாரா பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், இந்த முறை காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நயன்தாரா மற்றும் சமந்தா என இரு நடிகைகளும் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக தனியார் யூடியூப் சேனலில் நடிகர் விஜய்சேதுபதி பேட்டி அளித்திருந்தார்.

டிரெண்டிங்கில் நயன்தாரா
சமீப காலமாக நடிகை சமந்தாவுக்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து இருந்தாலும், எப்போதுமே சவுத் இந்தியாவை பொறுத்தவரையில் தான் லேடி சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார் நடிகை நயன்தாரா. நாளை படம் வெளியாக உள்ள நிலையில், சமந்தா ஹாஷ்டேக் மற்றும் விஜய்சேதுபதி ஹாஷ்டேக்கோ டிரெண்டாகவில்லை. #Nayanthara தான் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறது.

புதிய புரமோ
நடிகர் விஜய்சேதுபதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய புரமோ வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த அடுத்த நொடியே நயன்தாரா ஆர்மியினர் ஆஜராகி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். நானும் ரவுடி தான் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதே மேஜிக் மீண்டும் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சமந்தா ஆர்மி எங்கே
நயன்தாரா ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், சமந்தா ஆர்மியினர் எங்கே போய் விட்டனர் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தி ஃபேமிலி மேன் 2 வெற்றிக்கு பிறகு இந்தியளவில் நடிகை சமந்தாவுக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸ் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கண்மணியா? கதீஜாவா? யார் ராம்போ விஜய்சேதுபதிக்கு கடைசியில் ஜோடி ஆகப் போகிறார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மனங்களில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

வெற்றி பாதைக்கு திருப்புமா
இந்த ஆண்டு கோலிவுட்டில் வெளியான வலிமை, எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட மூன்று முன்னணி நடிகர்களின் படங்களும் வசூல் ரீதியாக ஓடினாலும், விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தமிழ் சினிமாவை மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்புமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











