twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் நாளே மணிரத்னம் என் மூக்கை உடைத்துவிட்டார்... பார்த்திபனின் சுவாரசிய பேச்சு

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் ஒன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமாவில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பெரிய நடிகர்களை ஒரே வரலாற்றுப் படத்தில் நடிக்க வைத்து வரலாறு படைத்துள்ளார் மணிரத்தினம்.

    இந்நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் பார்த்திபன் இந்தப் படத்தில் நடந்த சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

    திரை வித்தகன்.. மணிரத்தினம் பிறந்த நாள் இன்று.. குவியும் வாழ்த்துக்கள் !திரை வித்தகன்.. மணிரத்தினம் பிறந்த நாள் இன்று.. குவியும் வாழ்த்துக்கள் !

    குதிரை கதை

    குதிரை கதை

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். பேருந்தில் வரையப்பட்ட ஒரு குதிரையை பார்த்து தனது அம்மா என்று நினைத்து நிஜ குதிரை அந்தப் பேருந்தை துரத்தி சென்றது. அதுபோலத்தான் மணிரத்தினம் என்ற குதிரையை நம்பி நாங்கள் இந்தப் படத்தில் நடித்தோம் என்று எளிமையாக பதிலளித்தார்.

    குதிரை பிரச்சனை

    குதிரை பிரச்சனை

    பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டில் நடிகர் ஜெயராம் பேசியது பலரையும் கவர்ந்தது. குறிப்பாக ஒரு நடிகருக்கு குதிரை என்றாலே பயம் என்றும் தன்னுடைய அறிமுக காட்சியில் குதிரைக்கு பதிலாக கம்பீரமாக நடந்து வருகிறேன் என்று கூறியும் குதிரையில் வரவேண்டும் என்று மணிரத்தினம் வலியுறுத்தியதால், இருப்பதிலேயே சிறிய குதிரையை ஒன்று தேர்ந்தெடுத்து இரண்டு நாட்கள் அதனுடன் பழகி படப்பிடிப்பின்போது அந்தக் குதிரையில் அந்த நடிகர் வரும்பொழுது, மணிரத்தினம் இந்தக் குதிரை அல்ல நான் இவருக்கு தேர்ந்தெடுத்த குதிரையை கொடுங்கள் என்று அசிஸ்டண்ட் டைரக்டர்களிடம் சொன்னாராம். அந்த நடிகரும் எந்த விதமான மறுபேச்சும் பேசாமல் பெரிய குதிரையில் ஏறி ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை என்னுடன் மேடையில் நிற்கும் பார்த்திபன்தான் என்று ஜெயராம் பேசியது பலரையும் கவர்ந்தது.

    அறிமுகக் காட்சி

    அறிமுகக் காட்சி

    ஒரு மிகப்பெரிய நாவலை இரண்டு படங்களாக எடுத்த மணிரத்தினம், கதையில் சில காட்சிகளையும் கூடுதலாக சேர்த்திருந்தாராம். உதாரணத்திற்கு, பார்த்திபன் நடித்த சின்ன பழவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு அறிமுக காட்சி என்று எதுவும் நாவலில் கிடையாதாம். ஆனால் படத்திற்காக பார்த்திபனுக்கு ஒரு அறிமுகக் காட்சியை எழுதி இருந்தாராம் மணிரத்தினம்.

    நோஸ் கட்

    நோஸ் கட்

    முதல் நாள் அன்று வசனத்தை பழங்காலத்து தமிழில் பேசிக் காட்டினேன். ஆனால் இவ்வளவு தமிழ் வேண்டாம், மிகவும் புதியதாகவும் மிகவும் பழையதாகவும் இல்லாமல் நியூட்ரலாக தமிழை பேசுங்கள் என்று மணிரத்தினம் தனக்கு நோஸ் கட் கொடுத்ததாக பார்த்திபன் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருப்பார்.

    English summary
    Ponniyin's Selvan Part-1 directed by Mani Ratinam is running successfully in theatres. Mani Ratinam has created history by casting unimaginable great actors in a single historical film in Tamil cinema. In this case, in a recent press conference, actor Parthiban has told interesting information about this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X