Kamal haasan: அடுத்தடுத்து வெளியாகும் உலகநாயகன் பட அப்டேட்கள்.. பிறந்தநாள் ஸ்பெஷல்
சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே என்பது இவருக்கு சாலப்பொருந்தும்.
இந்த வயதிலும் தன்னுடைய சுறுசுறுப்பிற்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் கமலின் சட்டைப்பையில் அடுத்தடுத்து படங்கள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.
நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்தப் படங்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடைமுறை படுத்தி வருகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணம் சிறுவனாகவே களத்தூர் கண்ணம்மா படம் மூலம் துவங்கிய நிலையில், சினிமாவில் தன்னால் நடைமுறைப்படுத்த முடியாத களமே இல்லை எனும்படியாக இத்தனை வருட காலத்தில் அவரது பயணம் தொடர்ந்து வருகிறது. நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை இயக்குநர், நடன இயக்குநர் என்று இவர் கவனம் செலுத்தாத துறையே இல்லை என்று கூறலாம்.
அடுத்தடுத்த களங்களில் சிறப்பு: சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் சாத்தியப்படுத்தி வருகிறார் கமல்ஹாசன். இந்த வயதிலும் தன்னுடைய பிட்னசில் மிகுந்த கவனம் கொண்டவராக செயல்பட்டுவரும் கமல் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த நிலையில், தற்போது இந்தியன் 2, கல்கி 2898 AD என அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
KH233 பட சூட்டிங்: இந்த படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் கதைக்கும் கமல்தான் சொந்தக்காரர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தப் படத்தின் கதைக்களத்தை விரிவுப்படுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் பயிற்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஹெச் வினோத்.
கமல் பிறந்தநாள்: இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் KH234 படத்திலும் இணைகிறார். இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை தற்போது மணிரத்னம் முழுமூச்சாக செய்து வருகிறார். வரும் நவம்பர் 7ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி அவரது படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த அப்டேட்கள்: இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவரும் சூழலில் அதன் இன்ட்ரோ கிளிம்ப்ஸ் வரும் 3ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கமல் -மணிரத்னம் காம்பினேஷனில் உருவாகவுள்ள KH234 படத்தின் ப்ரமோ டீசரும், கமல் -ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள KH233 படத்தின் அப்டேட்டும், கமல் வில்லனாக கலக்கவுள்ள கல்கி 2898 AD படத்தில் கமல்ஹாசனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களின் ரோல் மாடல்: கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகிவரும் சூழலில் வரும் 2024ம் ஆண்டில் மட்டுமே அவரது நடிப்பில் அடுத்தடுத்த 3 படங்கள் ரிலீசாகவுள்ளது. இதனிடையே அவரது தயாரிப்பில் எஸ்கே21 படமும் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளது. இதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் ஒருபுறம் அரசியல் ஒருபுறம் என சுழன்று சுழன்று செயல்பட்டு வருகிறார் கமல். அவர் கண்டிப்பாக வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு சினிமாவில் மட்டுமில்லாமல் இயல்பு வாழ்க்கையிலும் ரோல் மாடலாகவே இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











