டிஜிட்டல் வடிவில் மீண்டும் திரையில்.. வியட்நாம் வீடு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை : சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியாக உள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வியட்நாம் வீடு. இதில் இவருடன் பத்மினி, நாகேஷ், வி.ஸ்.ராகவன் நடித்து இருந்தனர். இப்படத்தை மாதவன் இயக்கி இருந்தார்.

இதில் நடித்தவர் தான் சுந்தரம். இதில் அவர் நடித்த கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது. இதன் பின் அவர் பெயர் வியட்நாம் சுந்தரம் என்றே அழைக்கப்பட்டார்.
இப்படத்தை சிவாஜி தனது சொந்த புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இப்படம் வெளியான போது தியேட்டர்களில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரவேற்றனர். சிவாஜிக்கு இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் வரும் பாடல் உன் கண்ணீர் நீர் வழிந்தால் பாடல், பாலக்காட்டு பக்கத்திலே போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்து இந்த படத்தை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.

தற்போது, இந்த படத்தை டிஜிட்டல் வடிவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிவாஜியின் வசந்த மாளிகை ரீ ரீலிஸ் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிவாஜி நடித்த வியட்நாம் வீடு படத்தையும் ரீ ரீலிஸ் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் வடிவில் டிரைலர் இன்று வெளியாகிறது.

தற்போதும் கூட, சிவாஜியின் படத்தை பார்க்க அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. வசந்த மாளிகை ரீ ரீலீஸின் போது அந்த படத்தை அனைவரும் விரும்பி பார்த்தனர். தற்போது வெளிவர இருக்கும் வியட்நாம் வீடு படம் அந்த வெற்றியை தொடரும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











