twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்: நெகிழ்ந்த ராஜ்கிரண்

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வந்த ராஜ்கிரண், தற்போது சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார்.

    தொன்னூறுகளில் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு டாப் ஸ்டாராக கலக்கியவர் ராஜ்கிரண்.

    இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

     வடிவேலுவுக்கு முதல் பட வாய்ப்பு இப்படி தான் கிடைத்தது.. ராஜ்கிரண் சொன்ன ஸ்வாரஸ்ய தகவல்! வடிவேலுவுக்கு முதல் பட வாய்ப்பு இப்படி தான் கிடைத்தது.. ராஜ்கிரண் சொன்ன ஸ்வாரஸ்ய தகவல்!

    டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்தவர்

    டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்தவர்

    இன்றும் என்றும் ராஜ்கிரண் ஒரே ரகம்தான். கிராமத்து கட்டுமஸ்தான உடற்கட்டு, காட்டுத்தனமான கம்பீரம், மிரட்டும் நடிப்பு. தயாரிப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர்களில் ராஜ்கிரண் முக்கியமானவர். தனக்கு எந்த பாத்திரம் பொருந்துமோ அதில் மட்டும் நடித்து தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ராஜ்கிரண் தற்போது ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், தனது பாத்திரம் ஹீரோவுக்கு இணையாக இருந்தால் மட்டுமே நடிப்பார், இல்லையென்றால் நோ தான்.

    ஆசிரியர்களை நினைகூர்ந்த ராஜ்கிரண்

    ஆசிரியர்களை நினைகூர்ந்த ராஜ்கிரண்

    சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் நடித்திருந்தார் ராஜ்கிரண். தொன்னூறுகளில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெள்ளிவிழா கொண்டாடாமல் இருந்ததில்லை. இந்நிலையில், இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நடிகர் ராஜ்கிரண் நெகிழ்ச்சியான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த அனைத்து ஆசிரியர்களின் பெயரையும் நினைவில் வைத்து மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.

    கல்விப் பிச்சை அளித்த பெருந்தகைகள்

    கல்விப் பிச்சை அளித்த பெருந்தகைகள்

    அந்தப் பதிவில், "ஆசிரியர் தின நன்னாளில் எனக்கு கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப் பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன். 1955 முதல் 1966 வரையிலான காலகட்டம். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப் பள்ளியின் முதல் வகுப்பு ஆசிரியர் மோஸஸ் ஐயா அவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார் ஐயா அவர்களுக்கும், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம் அம்மா அவர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் ஐயா அவர்களுக்கும்" நன்றி தெரிவித்துள்ளார்.

    நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்

    நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்

    மேலும், "சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும், சிறப்பு தமிழாசிரியர் நடராஜன் ஐயா அவர்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு ஐயா அவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகந்நாதன் ஐயா அவர்களுக்கும், சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியராய் இருந்த,செல்வம் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த, ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும், என் பணிவையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன்...அவர்களெல்லாம், இப்பொழுது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும், அவர்கள் மனச்சாந்தியுடனும், சமாதானத்துடனும், நிறைவோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு

    சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு

    ராஜ்கிரணின் இந்தப் பதிவு ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை இன்றுவரை நினைவில் வைத்து அவர்களை நினைவுக்கூர்ந்ததை ரசிகர்களும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், நடிகர் ராஜ்கிரண் படித்த பள்ளிக் கூடங்கள் எல்லாம் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களாக இருந்தாலும், அங்கு அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் பாணியாற்றியுள்ளனர் என்பது, பலரையும் சிந்திக்க வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

    English summary
    Teacher's Day is celebrated on 5th September today. After this, actor Rajkiran remembered the teachers who taught him an education. He also thanked them by listing their names
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X