லண்டன் சந்திப்பு… மீண்டும் ராஜமவுலி படத்தில் இணையும் அனுஷ்கா!

பாகுபலி படங்களை தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Anushka: ஒல்லியான அனுஷ்கா..மாதவனுக்கு ஜோடியானார்- வீடியோ

ஐதராபாத்: பாகுபலி முதல் பாகத்தில் வயோதிக தோற்றத்திலும் இரண்டாம் பாகத்தில் அழகான இளவரசியாகவும் நடிகை அனுஷ்கா நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் முக்கியமான வேடத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவசேனா

தேவசேனா

பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் கைதான நிலையில் இருக்கும் வயது முதிர்ந்த தோற்றத்தில் மிகவும் குறைவான காட்சியிலே அனுஷ்கா நடித்திருந்தார். ஆனால், இரண்டாவது பாதியில் அழகான தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தேவசேனா கதாபாத்திரத்திற்காக வில் பயிற்சி, வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பல பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஓவர் வெயிட்

ஓவர் வெயிட்

தெலுங்கில் சைஸ் ஜீரோ என்றும் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற தலைப்பிலும் ஆர்யாவுடன் அனுஷ்கா இணைந்து நடித்த ஒரு படம் அனுஷ்காவுக்கு பல பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்துவிட்டது. சைஸ் ஜீரோ படத்திற்காக ஓவர் வெயிட் போட்ட அனுஷ்கா, அதனை சரி செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு, பல ஆப்ரேஷன்களை செய்து குறைத்துள்ளார்.

நிசப்தம்

நிசப்தம்

அனுஷ்கா தனது உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் பேச்சு திறனற்ற ஓவியக் கலைஞர் சாக்‌ஷி எனும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். விரைவில் ரிலீசாகவுள்ள அந்த படத்தில் நடிகர் மாதவன் அனுஷ்காவுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

லண்டன் சந்திப்பு

லண்டன் சந்திப்பு

பாகுபலி திரைப்படம் லண்டனில் உள்ள புராதனமான ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்குக்காக ராஜமவுலி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோர் லண்டனில் மீண்டும் சந்தித்தனர். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

சந்திப்பால் வாய்ப்பு

சந்திப்பால் வாய்ப்பு

சமீபத்தில் லண்டனில் பாகுபலி படம் திரையிடப்பட்ட போது ராஜமவுலி அனுஷ்கா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் நடிப்பில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X