ஷிமோகாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரவேற்பு.. ரசிகர்கள் அன்புக்கு தலைவணங்கும் தளபதி!
Recommended Video
கர்நாடகா: சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.
தளபதி விஜய் தங்கியுள்ள ஹோட்டலை அறிந்து கொண்ட ஷிமோகா ரசிகர்கள், ஹோட்டலுக்கு முன் விஜய்யின் தரிசனத்திற்காக தினமும் காத்துக் கிடக்கின்றனர்.
அண்மையில் கிரேனில் பிரம்மாண்ட மாலை விஜய்க்கு அணிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் ரசிகர் ஒருவர், விஜய்க்காக எடுத்து வந்த மலர் மாலையை தலை வணங்கி விஜய் ஏற்றுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயங்கர ஆக்ஷன்
லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் காட்சிகளை எப்படி பண்ணுவார் என்பதற்கு கைதி படத்தின் ஆக்ஷன் காட்சிகளே போதுமான ஆதாரம். இந்நிலையில், விஜய், விஜய்சேதுபதி மோதும் அதிரடி காட்சிகள் ஷிமோகவில் பயங்கரமாக படமாக்கப்பட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் அன்பு
கிரேனில் பிரம்மாண்ட மாலையை கொண்டு விஜய்க்கு அணிவித்து சென்னை ரசிகர்களை விட ஷிமோகா ரசிகர்கள் தங்கள் அன்பை ஒரு படி அதிகமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ரசிகர்கள் மீது அக்கறை
ஷூட்டிங்கிற்காக தினமும் ஹோட்டலை விட்டு தனது காரில் விஜய் செல்வதற்கு முன்பாக, அங்கு அவருக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகமாக கையசைத்து செல்கிறார் விஜய். விஜய் ஹோட்டலை விட்டு வெளியே வரும் வீடியோக்களை மொபைல் போனில் படமெடுத்து ரசிகர்கள் தினமும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
தலைவணங்கும் தளபதி
தன்னை பார்க்க இத்தனை பேர் காத்து நிற்கிறார்கள் என்பதை அறிந்து நடிகர் விஜய், அவர்களிடம் சென்று பேசுவது, செல்ஃபி எடுப்பது போன்று அவர்களின் அன்புக்கு மரியாதை செலுத்தி வருகிறார். இன்று காலை மலர் மாலையுடன் அவருக்காக காத்திருந்த ஒரு ரசிகர் அருகில் சென்று, தலைவணங்கி அந்த மாலையை அவர் கையாலே போட சொல்லி விஜய் கேட்டுக் கொண்ட வீடியோ விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











