இசையமைப்பாளர் பரணியின் ‘ஒண்டிக்கட்ட’ ரிலீசுக்கு ரெடி!
இசையமைப்பாளர் பரணி இயக்கத்தில் ‘ஒண்டிக்கட்ட’ படம் ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.
சென்னை: இசையமைப்பாளர் பரணி இயக்குநராக அறிமுகமாகும் ஒண்டிக்கட்ட படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம் " ஒண்டிக்கட்ட'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுமார் 18 வருடங்களாக இசையமைப்பாளராக உள்ள பரணி இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த நேகா, இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எடிட்டிங் - விதுஜீவா.

'நாம் பிறந்த போதும் ஒண்டிக்கட்டையாகத்தான் பிறக்கிறோம்..போகும் போதும் ஒண்டிக்கட்டையாகத் தான் போகப் போகிறோம். அதனால் தான் இப்படத்திற்கு ஒண்டிக்கட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளதாக' படக்குழுவினர் கூறுகின்றனர்.
இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் ரிலீசாக இருக்கிறது 'ஒண்டிக்கட்ட'.


Click it and Unblock the Notifications











