Don't Miss!
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 'இந்த' திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு பிரச்சனை இருக்காது! எந்த திட்டம்
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்கள்...அஜித்தின் வலிமை ட்ரெய்லர் சாதனை...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இது இன்று காலைக்குள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வலிமை படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த ரசிகர்கள் வலிமை படத்தின் டிரைலரை வேற மாறி ரெக்கார்டு படைத்துள்ளனர்.
மனைவி மிர்னா மேனன் மீது இப்போதும் காதல் குறையவில்லை.. உருகும் விஜய் விஷ்வா

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு
2021 ஆம் ஆண்டே தமிழ் சினிமாவின் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படமாக இருந்த அஜித் குமாரின் வலிமை திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசாகாத நிலையில், 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படமாக மாறி உள்ளது. ஜனவரியில் பொங்கலன்று வலிமைப்படம் வெளியாக உள்ள நிலையில் மிகப்பெரிய வரவேற்பை படம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் அதீத எதிர்ப்பார்ப்பில் வலிமை திரைப்படம்
போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ளது வலிமை. போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியாக உள்ள வலிமை திரைப்படத்திற்கு எந்தவொரு பெரியளவில் ஆன புரமோஷனும் நடைபெறவில்லை. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்னமும் வலிமை ஒடிடி ரிலீசா? அல்லது தியேட்டர் ரிலீசா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ப்ரமோஷன் பற்றி கவலைப்படாத வலிமை டீம்
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புரமோஷனுக்காக மும்பை, சென்னை, ஹைதராபாத், கேரளா என இயக்குநர் ராஜமெளலி மற்றும் அந்த படத்தின் ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தொடர்ந்து ஒவ்வொரு நகரத்திற்கும் சென்று பெரிய அளவில் புரமோஷன் நடத்தி வருகின்றனர். ஆனால், வலிமை படத்திற்கு சமூக வலைதளங்களில் கூட முறையான புரமோஷனை போனி கபூர் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எதைப்பற்றியும் கவலைப்படாத அஜித் டீம்
பொதுவாகவே நடிகர் அஜித் படங்களுக்கு புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. அஜித் குமார் என்கிற அந்த ஒரு பெயரே மற்ற அனைத்து புரமோஷன்களையும் தூக்கி சாப்பிட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் வலிமை படத்தை வெளியிட உள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு மற்ற நடிகர்களை வைத்தாவது புரமோஷன்களை செய்திருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

வெளியான வலிமை டிரைலர்
இந்நிலையில் பெருத்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று மாலை வலிமை பட ட்ரெய்லர் வெளியானது. மீசை தாடி இல்லாமல் இளமையான தோற்றத்தில் அஜித் கலக்கலாக இருந்தார். படத்தில் அவர் சென்னைக்கு புலனாய்வு செய்ய சென்னை வரும் காவல் அதிகாரிபோல் காட்டப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் கேங் கொள்ளை கும்பலுடன் அவர் நடத்தும் சாகசக்காட்சிகள், மோட்டார் சைக்கிளை அஜித் ஓட்டும் நிகழ்வுகள், மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் காட்சிகள் ட்ரெய்லரில் கலக்குகிறது.
அழகான உடையில் 10 வயது குறைந்த தோற்றத்துடன் கூலிங் கிளாஸ் அணிந்து அஜித் தோன்றும் காட்சிகள் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தியேட்டரில் கலக்கும் என தெரிகிறது. காவல் அதிகாரி மீதே குற்றம் சுமத்தி அவர் மீது நடவடிக்கை வருவதும், அதற்காக சிறையில் இருப்பது போன்ற காட்சியும், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்கிற வாசகங்களும், கடைசியில் அஜித் வழக்கமான பாணியில் குரல் கொடுத்து வீறு கொண்டு எழும் காட்சிகளும் நல்ல எண்டெர்டெயின்மெண்ட் உள்ளதாக நமக்கு உணர்த்துகிறது.

17 மணி நேரத்தில் 9.6 மில்லியன் பார்வையாளர்கள்
அஜித்தில் வலிமை ட்ரெய்லர் பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்த நிலையில் ட்ரெய்லர் மிரட்டியுள்ளது. இதனால் அதிகம் லைக் செய்யப்பட்டு, அதிகம் ஷேர் செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் பல்வேறு தளங்களில் ட்ரெய்லர் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட சாதனையை படைத்துள்ளது. ஒரே நாளில் வலிமை ட்ரெய்லர் ட்ரெண்டிங்கில் நெ.1 இடத்தை பிடித்துள்ளதாகவும், ஒரு மில்லியன் லைக், ஒரு கோடி பேர் பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யூடியூபில் 17 மணி நேரத்தில் 9.6 மில்லியன்களை கடந்து 10 மில்லியனை நோக்கி செல்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 1.5 கோடியை கடந்ததாக சோனி மியூசிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.