மாடியிலிருந்து தவறி விழுந்த பிரபல பாப் பாடகர் மரணம்.. ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம்
லண்டன்: உலக அளவில் ஃபேமஸான பாப் பாடகர் லியாம் பெய்ன். இவருக்கென்று உலகம் முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர் ஒன் டைரக்ஷன் எனப்படும் பாப் பேண்டில் முக்கியமான நபராக இருக்கிறார். இவர் தனது காதலியுடன் அர்ஜென்டினாவுக்கு சுற்றுலா சென்றார். சில நாட்களில் காதலி அங்கிருந்து கிளம்பிவிட; தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் லியாம் பெய்ன்.
பாப் இசைக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி அவர்களது ஃபேமஸான பாப் பேண்டில் ஒன்றுதான் 1டி எனப்படும் ஒன் டைரக்ஷன். இதில் லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். இந்த பாப் பேண்டானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இவர்கள் பாடும் பாடல்களுக்கென்று இங்கிலாந்து மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லியாம் பெய்ன்: இந்த பேண்டிலேயே மிகவும் ஃபேமஸானவர் லியாம் பெய்ன். இவர் 1993அம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். முதலில் 2008ஆம் ஆண்டு தி எக்ஸ் ஃபேக்டர் என்ற டெலிவிஷன் சீரிஸுக்காக ஆடிஷனில் கலந்துகொண்ட இவர் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். பிறகு ஒன் டைரக்ஷன் பேண்டில் சேர்ந்தார். அந்த க்ரூப்பிலேயே மிகச்சிறந்த பாப் கலைஞராக தன்னை மாற்றிக்கொண்டார் பெய்ன். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த ஒன் டைரக்ஷன் குழுவிலிருந்து விலகிவிட்டார்.
சுற்றுலா சென்ற லியாம் பெய்ன்: அந்த பேண்டிலிருந்து அவர் விலகினாலும் இன்றுவரை ஒன் டைரக்ஷனுக்கு பெய்ன் நல்ல அடையாளமாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் கேத் கேசிடி என்பவரை காதலித்துவந்தார். இருவரும் சேர்ந்து கடந்த மாதம் 30ஆம் தேதி அர்ஜெண்டினாவுக்கு சுற்றுலா சென்றனர். இரண்டு வாரங்கள் சேர்ந்து தங்கியிருந்து சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அதன் பிறகு கடந்த 14ஆம் தேதி கேத் தனது சொந்த வேலைகள் காரணமாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
மூன்றாவது மாடியில் பெய்ன்: தனது காதலி சென்ற பிறகு போனோஸ் ஏர்ஸ் நகரத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் மூன்றாவது மாடியில் பெய்ன் மட்டும் தங்கியிருந்தர். இந்தச் சூழலில் மூன்றாவது மாடியில் நின்றுகொண்டிருந்த லியாம் பெய்ன் அங்கிருந்து தவறி விழுந்தார். இதன் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. பெய்னின் உயிரிழப்பு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் பாப் இசை உலகுக்கு பேரிழப்பு என்றும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
காவல் துறையினர் விசாரணை: லியாம் பெய்ன் உயிரிழந்ததை அடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலில் காவல் துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். லியாம் பெய்ன் உண்மையிலேயே தவறி விழுந்துதான் உயிரிழந்தாரா இல்லை யாரேனும் திட்டமிட்டு படுகொலை செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியிருக்கிறது போலீஸ். முன்னதாக லியாம் பெய்ன் மாயா என்பவரை காதலித்து பிறகு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications