பத்மபூஷண் கமல் ஹாஸனுக்கு 'ஒன்இந்தியா' வாழ்த்து!
சென்னை: பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் கமல் ஹாஸனுக்கு ஒன்இந்தியா சார்பில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது நிலையில் இருக்கும் பத்மபூஷண் விருது கமல் ஹாஸனுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன. தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வரிசையாக அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்துக்கு வந்து மாலைகள் அணிவித்தும், பூங்கொத்து தந்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஒன்இந்தியா இணையதளம் சார்பில் கமல் ஹாஸனுக்கு இன்று காலை அவரது அலுவலகத்தில் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார் நமது சினிமா ஆசிரியர் டாக்டர் எஸ் ஷங்கர்.
பதிலுக்கு ஒன் இந்தியா தளத்துக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார் கமல் ஹாஸன்.
Comments


Click it and Unblock the Notifications