ஒரு ஜாக் இரண்டு ரோஸ்... தமிழில் டைட்டானிக் படம், விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் இன்ஸ்டா வீடியோ

சென்னை - கோலிவுட்டில் புது கதைக்களத்துடன் ரசிகர்களை மகிழ்விக்கும் இளம் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

கடைசியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்குகிறார்.

அந்த படத்திற்காக டைட்டானிக் படத்தில் வரும் ஒரு காட்சியை மறு உருவாக்கம் செய்கிறார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது .

 நகைச்சுவை நடையில்…

நகைச்சுவை நடையில்…

விக்னேஷ் சிவன் இயக்கிய அவரது முந்தைய 3 படங்களும் ஒரு சீரியஸான விஷயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள போதிலும் அதை நகைச்சுவையோடு சொல்லி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அவரது இரண்டாவது படமான நானும் ரவுடிதான் விஜய் சேதுபதிக்கு வணிக ரீதியாக பெரும் பெயரை வாங்கித் தந்த படம். அதே நானும் ரவுடிதான் படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நெருக்கம் ஆகி பின் காதலர்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

 தானா சேராத கூட்டம்..

தானா சேராத கூட்டம்..

விக்னேஷ் சிவன் கடைசியாக இயக்கிய படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மிகவும் எதிர்பார்ப்போடு வெளியான படம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல மக்கள் கூட்டம் திரையரங்குகளில் தானாக சேரும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு நேரெதிராக கூட்டம் திரை அரங்குகளில் வந்து சேராததால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. தானா சேர்ந்த கூட்டம் இந்தியில் அக்ஷய் குமார் நடித்து வெற்றியடைந்த ஸ்பெஷல் 26 படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது .

 காத்துவாக்குல 2 காதல்..

காத்துவாக்குல 2 காதல்..

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்துவாக்குல 2 காதல் . நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரு முக்கோண காதல் கதையை நகைச்சுவையோடு அனைத்து வித ரசிகர்களையும் கவரும் படியான கதைக்களம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தானா சேர்ந்த கூட்டம் தவறவிட்ட வெற்றியை காத்துவாக்குல இரண்டு காதல் மூலம் எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று விக்னேஷ் சிவன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி இருப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

ஒரு ஜாக் 2 ரோஸ்..

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். காத்துவாக்குல 2 காதல் ஷூட்டிங் ஸ்பாட் நிகழ்வு அது. ஒரு காட்சியின் மேக்கிங் வீடியோ, டைட்டானிக் படத்தில் டைட்டானிக் கப்பலின் ஒரு உச்சியில் ஜாக் மற்றும் ரோஸ் நின்றபடி கைகளை விரித்து நிற்கும் காட்சி. சினிமா ரசிகர்கள் காலத்துக்கும் நினைவில் வைத்துக் கொண்ட காட்சி. அந்த காட்சியை மறு உருவாக்கம் செய்ய விக்னேஷ் சிவன் கிரீன் மேட் உடன் தயாராக இருக்க விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து அதற்கான ஒத்திகையில் ஈடுபடுகிறார்கள். அந்த காஸ்ட்யூம் யாருக்கு மிக அழகு சமந்தாவுக்கா ? அல்லது நயன்தாராவுக்கா என்ற ஒரு சிறிய போட்டியும் ரசிகர்கள் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி கொண்டிருக்க ஹாட்ஸ்டார் இந்த படத்தை ஒரு பெரிய தொகைக்கு வாங்கி விட்டதாகவும், ஆனாலும் ஏப்ரல் மாதம் இந்த படம் திரை அரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X