நீங்க நீங்களா இருங்க பாஸ்.. சட்டையைக் கழற்றி விட்டு தத்துவம் சொன்ன குமாரு!
மும்பை: அக்ஷய் குமார் ஒரு தத்துவம் சொல்லியுள்ளார். ரொம்ப கஷ்டமானதும் அல்ல.. போரடிப்பதும் அல்ல. ஜாலியான தத்துவம்தான்.
"படையப்பா" மட்டுமல்ல அக்ஷய் குமாரும் கூட தனது வயதையும் தாண்டிய உடலமைப்புடன் இன்னும் இளம் நாயகர்களுக்குப் போட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நடிப்பில் மட்டுமல்லாமல் நடனம், சண்டைக் காட்சிகள் என இளசுகளுக்கு டஃப் கொடுக்கும் அக்ஷய் குமார், அந்தக் காலத்து ஹீரோக்களில் இன்னும் லைம்லைட்டில் இருக்கும் நாயகன். சரி போரடிக்குது.. மேட்டருக்கு வாப்பான்னு நீங்க சொல்வது காதுல விழுது பாஸ்!
கட்டுமஸ்து
அக்ஷய் குமார் ஒரு போட்டோ போட்டுள்ளார். வெறும் டிரவுசருடன் எடுத்துள்ள கருப்பு வெள்ளைப் படம். புல் பாடியோடு கட்டுக்கோப்பான தனது உடலமைப்பை வெளிக்காட்டும் போட்டோ அது.

நீங்களாவே இருங்க
அதற்கு அவர் போட்டுள்ள கேப்ஷன் இதுதான்.. நாம என்ன சாப்பிடுகிறோமோ அப்படித்தான் நாமும். இயற்கை அன்னையின் படைப்பாக நாம் இருப்போம். செயற்கைப் படைப்புகளின் படைப்பாக நாம் மாறி விடக் கூடாது. உடல் ஆரோக்கியத்திற்காக செயற்கையை நாடாதீர்கள்.

பேணிக் காத்துக்கங்க
உங்களது உடம்புக்கு விசுவாசமா இருங்க. அதை அதன் இயல்போடு பேணிக் காத்து வாருங்கள். என்னைப் பாருங்கள், எனது உடலைப் பாருங்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பார்த்துக்கங்க. ஒரு வாழ்க்கை.. அதை சரியாக வாழ்வோம்.. இப்படிப் போகிறது அந்த டிவீட்.

வாழ்த்தலாமே பிரண்ட்ச்!
இன்னிக்கு நிறையப் பேரு சுமார் மூஞ்சிக் குமாரு கணக்காக எதைப் பத்தியும் கவலைப்படாமல், வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று கேஷுவலாக வாழப் பழகி விட்டனர். குடிப்பது, கணக்கே இல்லாமல் சாப்பிடுவது என்று மந்தித்துப் போய்க் கிடப்போருக்கு மத்தியில்... 51 வயதிலும் படு ஃபிட்டாக இருக்கும் அக்ஷய் குமாரை வாழ்த்தலாமே பிரண்ட்ச்... நேத்து அவருக்குப் பொறந்த நாள் வேறயாம்!


Click it and Unblock the Notifications











