விசுவாசம் படத்தில் இணையும் இன்னொரு காமெடி நடிகர்!
Recommended Video

சென்னை : அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதனிடையே படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் காமெடி நடிகர்களாக யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் ஏற்கெனவே கமிட்டானதை தொடர்ந்து படக்குழுவினர் ரோபோ ஷங்கரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ரோபோ ஷங்கரும் நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியாகத் தெரிந்துவிடும்.
விசுவாசம் படத்தில் அஜித்-சிவா நான்காவது முறையாக கூட்டணி அமைக்க, நயன்தாரா நாயகியாகவும், டி.இமான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விசுவாசம்
அஜித் நடிப்பில் மீண்டும் நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகவிருக்கும் திரைப்படம் 'விசுவாசம்'. இப்படத்தின் கதை விவாத பணிகள் முடிவை எட்டியிருக்கும் சூழலில் மார்ச் மாதம் முதல் படப்பிடப்பிப்பு தொடங்கவுள்ளது.

அஜித் - சிவா கூட்டணி
'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே 'விசுவாசம்' படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி சில மாதங்களாகிவிட்ட நிலையில் மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோயின் நயன்தாரா
படத்திற்கான ஹீரோயின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. 'விசுவாசம்' படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

காமெடியன்
'விசுவாம்' படத்தின் காமெடி நடிகர்களாக யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் ஏற்கெனவே கமிட்டானதை தொடர்ந்து படக்குழுவினர் ரோபோ ஷங்கரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரோபோ ஷங்கர் நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியாகும்.

டி.இமான்
இசையமைப்பாளர் டி.இமான் 'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். அஜித் படத்தில் இசையமைக்கவேண்டும் என்கிற அவரது ஆசை இப்படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











