சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இன்னொரு காமெடியன்.. ஆனா சதீஷ் இல்ல!

By Vignesh Selvaraj

Recommended Video

சிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்!- வீடியோ

சென்னை : 'சீமராஜா' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க, ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கவிருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் கருணாகரனோடு இன்னொரு காமெடியனாக யோகிபாபுவும் நடிக்கவிருக்கிறார்.

கருணாகரன் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் படத்தில் கமிட் ஆன நிலையில் புதிதாக இணைந்திருக்கிறார் யோகிபாபு. 24 ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.

One more comedian in sivakarthikeyan movie

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவிருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

யோகிபாபு ஏற்கெனவே சிவகார்த்திகேயனுடன் 'மான் கராத்தே', 'காக்கி சட்டை', 'ரெமோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் யோகிபாபு.

இப்படத்தில் நடிக்க நடிகர் சதீஷை சிவகார்த்திகேயன் பரிந்துரைத்ததாகவும், இயக்குநர் ரவிகுமார் தனது முதல் படத்தில் நடித்த கருணாகரனையே நடிக்கவைக்க ஆர்வம் காட்டியதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யோகிபாபு முன்னணி நடிகர்களின் படங்களையும் கையில் வைத்திருக்கிறார். அஜித்தின் 'விசுவாசம்', விஜய்யின் 62-வது படம், நயன்தாரா நடிக்கும் 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்களில் காமெடியன் யோகிபாபு தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X