அப்படி இருந்த இயக்குனர் ஷங்கரா இப்படி ஆகிவிட்டார்: நல்லது தான்
Recommended Video

சென்னை: இயக்குனர் ஷங்கரின் மாற்றம் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. 2.0 படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று ஒரு காலத்தில் ரஜினி ரசிகர்கள் ஷங்கரிடம் கெஞ்சினார்கள். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.

கெஞ்சிப் பார்த்து கடுப்பானவர்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டார்கள். சற்றும் மனம் தளராத ஷங்கர் அந்த மீம்ஸ், கலாய் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்தார். என்ன சார், கலாய்த்தால் ரீட்வீட் செய்கிறீர்கள். அதற்கு பதில் அப்டேட் கொடுக்கலாம் அல்லவா என்று ரசிகர்கள் கேட்டனர்.
இந்நிலையில் ஷங்கர் ஆளே மாறிவிட்டார். 2.0 படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அறிவிப்பு வெளியிட்டதோடு சும்மா இல்லாமல் அவ்வப்போது ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை நினைவூட்டி புதுப்புது படங்களுடன் ட்வீட் செய்து வருகிறார் அவர்.
சிட்டியும், அக்ஷய் குமாருன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் இன்று வெளியிட்டு ட்ரெய்லர் வருகிறது, தயாராகுங்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ஷங்கர்.


Click it and Unblock the Notifications











