இன்றும் எவிக்ஷன்: யார், ஐஸ்வர்யா வெளியேற்றப்படுகிறாரா?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இன்றும் எவிக்ஷன் உள்ளதாம்.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு பேராதரவாக இருந்த யாஷிகா நேற்று வெளியேறப்பட்டார். சின்னப் பெண்ணாக இருந்தாலும் மெச்சூராக நடந்து கொண்டவர் யாஷிகா.
வயது இருந்தும் சின்னப் பிள்ளையை விட மோசமாக நடந்து கொள்கிறார் ஐஸ்வர்யா.

யாஷிகா
அந்த வஞ்சகி ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்து வீழ்ந்துவிட்டாயே யாஷிகா என்று பார்வையாளர்கள் அவருக்காக பரிதாபப்பட்டுள்ளனர். எதன் அடிப்படையில் ஐஸ்வர்யா காப்பாற்றப்படுகிறார் என்பதை விளக்க பிக் பாஸ் தயாரா?. டாஸ்குகளை நன்றாக செய்த யாஷிகா ஏன் வெளியேற்றப்பட்டார்?
வெளியேற்றம்
நேற்று யாஷிகா வெளியேற்றப்பட்ட நிலையில் இன்றும் எவிக்ஷன் உள்ளது என்று கூறி ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த எவிக்ஷன் கார்டில் யார் பெயர் உள்ளது என்பதை தெரிவிக்க வைஷ்ணவி ரொம்பவே தயங்குகிறார்.

விளம்பரம்
இன்றும் எவிக்ஷன் என்று கூறி பார்வையாளர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளனர். இறுதியில் பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக சென்றுள்ள வைஷ்ணவி, ரம்யாவின் பெயர்கள் அதில் இல்லாமல் இருந்தால் சரி. ப்ரொமோவில் ஒன்றை காட்டிவிட்டு நிகழ்ச்சியில் வேறு ஒன்றை காட்டுவது ஒன்றும் பிக் பாஸுக்கு புதிது அல்லவே.
நம்ப மாட்டோம்
பிக் பாஸ் உங்களின் பொய்யை நம்ப யாரும் தயாராக இல்லை. ரூட்டை மாத்துங்க


Click it and Unblock the Notifications











