»   »  “சர்கார்” கம்மிங் சூன்... விஜய் படத்துக்கு இப்படியும் ஒரு புதுப்பிரச்சினை!

“சர்கார்” கம்மிங் சூன்... விஜய் படத்துக்கு இப்படியும் ஒரு புதுப்பிரச்சினை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்னதாகவே சர்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கால், இப்படம் திட்டமிட்ட தேதியில் ரிலீசாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சர்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் வாயிலாக புதிய பிரச்சினை ஒன்று முளைத்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்:

தமிழ் ராக்கர்ஸ்:

தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் தான். முன்பெல்லாம் திரைக்கு வந்த புதிய படங்களை ஒரு சில நாட்களில் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்து, திரையரங்க வசூலுக்கு பெரும் தடையாக இருந்து வந்தனர். இந்த தளத்தை தடை செய்ய பல முயற்சிகள் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடந்தாலும், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.

புதிய படங்கள்:

புதிய படங்கள்:

சமீபகாலமாக முக்கிய நடிகர்களின் படங்களை ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி வருகிறது தமிழ் ராக்கர்ஸ். அப்படியாக சில படங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

எச்.டி. பிரிண்ட்:

எச்.டி. பிரிண்ட்:

இந்நிலையில், சர்கார் படத்திற்கும் அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். அதாவது, நவம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் முன்பே சர்கார் படத்தை முதல் நாளே வெளியிடுவோம் என சவால் விட்டுள்ளனர். அதுவும் எச்.டி. பிரிண்டில் படம் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் டிவீட்டில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி:

அதிர்ச்சி:

இது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Vijay's Sarkar movie is facing onemore problem as Tamil rockers have announced the release on one day before of the movie's release.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more