»   »  யாருப்பா இந்த பப்ளிக் ஸ்டார்... பட்டத்தையே பேரா வச்சிக்கிட்டாரா?

யாருப்பா இந்த பப்ளிக் ஸ்டார்... பட்டத்தையே பேரா வச்சிக்கிட்டாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொஞ்ச நாட்களாகவே பப்ளிக் ஸ்டார் விவசாயிகளுக்கு உதவினார்... பப்ளிக் ஸ்டார் இதைச் செய்தார், அதைச் செய்தார் என்றெல்லாம் பிரஸ் ரிலீஸ்...

யாரா இருக்கும் இந்த பப்ளிக் ஸ்டார்? பவர் ஸ்டார், புவர் ஸ்டார் பாணியில் வந்திருக்கும் இந்த ஸ்டாரின் உண்மையான பெயர் என்னவென்று கேட்டால் ஒருத்தருக்கும் தெரியல...

One more star in Kollywood.. He is Public star!

சரி, அவரோட பிஆர்ஓ நிகில்கிட்ட கேட்டிருக்கேன்... இந்த செய்தி அடிச்சி முடிக்கிறதுக்குள்ள சொல்லிடறாரா பார்ப்போம்!

விஷயம் என்னன்னா...

இந்த பப்ளிக் ஸ்டார் ஒரு படத்தில் இப்ப ஹீரோவாவே நடிக்கிறார். தலைப்பு காளியாட்டம்.

கிங் பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராமர் படத்தை இயக்கிய
வருண் ஆதிராஜா இயக்குகிறார்.

பப்ளிக் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறார் சமீரா. சமீரா ரெட்டின்னு கற்பனை பண்ணிடாதீங்க. இவர் புதுசு.

ரவுடிகளின் ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ், போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள் - இந்தப் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் சொல்கிறதாம் படம்.

ஒளிப்பதிவு :இஜே நௌட்ஷா, இசை : பிரசாத் நிக்கி , எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ் , சண்டைப்பயிற்சி: ஆக்க்ஷன் பிரகாஷ் , நடனம் : ராபர்ட் , மக்கள் தொடர்பு : நிகில் , தயாரிப்பு : அயோத்தி ஆர்கே

கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் - வருண் ஆதிராஜா

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் 40 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொள்ளாச்சி , கோவை, ஊட்டியில் நடைபெறுகிறது.

ஆங்... கடைசியா பெயரைச் சொல்லிட்டார் நிகில். உண்மையான பேரு... துரை பிரபாகராம்!

English summary
Debutante Durai Prabhakar, aka Public star is playing lead role in Kaaliyattam movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X