முருகதாஸ் எடுத்த நடவடிக்கை எல்லாம் வீண்: மீண்டும் கசிந்த 'தர்பார்' வீடியோ
மும்பை: தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மேலும் ஒரு வீடியோ கசிந்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29ம் தேதி துவங்குகிறது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் முருகதாஸ். தர்பார் படத்திற்கான போட்டோஷூட் முதல் ஷூட்டிங் வரை தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்து கொண்டே இருக்கின்றன.
முருகதாஸும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ கசிந்துள்ளது. முருகதாஸ் கஷ்டப்பட்டு காட்சிகளை படமாக்குகிறார். ஆனால் ஆர்வக்கோளாறில் யார், யாரோ அதை கசியவிட்டு அவரின் உழைப்பை வீணடிக்கிறார்கள்.
தர்பார் படம் முடிவதற்குள் இப்படி வீடியோக்கள் கசிந்து கசிந்தே படத்தை பார்த்துவிடலாம் என்று கேலி செய்யும் அளவுக்கு வீடியோக்கள் கசிந்துவிட்டன. இந்த வீடியோக்கள் கசிவால் முருகதாஸ் மட்டும் அல்ல ரஜினி ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஏற்கனவே படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை கசியவிட்டு தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம் செய்து வருகிறது. அது போதாது என்று படப்பிடிப்பின்போதே இப்படி வீடியோக்கள் கசிந்தால் முருகதாஸ் பாவம் என்ன தான் செய்வார்.


Click it and Unblock the Notifications











