யார் அந்த கருப்பு ஆடு..திரும்பத் திரும்ப இதே மாதிரி நடக்குதே.. அப்செட்டில் தர்பார் படக்குழு!
சென்னை: தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மற்றொரு வீடியோ லீக்காகி இருப்பதால், படக்குழுவினர் சோகத்தில் இருக்கின்றனர்.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து, படப்பிடிப்பு தளத்தின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், தர்பார் படப்பிடிப்பு நடைபெறுவது ஒரு கல்லூரியில். எனவே படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கும் மாணவர்கள், தங்கள் செல்போனில் படம்பிடித்து, அதை சமூக வலைதளங்களில் கசியவிட்டுவிடுகின்றனர்.

மாணவர்களுடன் மோதல்:
இதனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க மாணவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. படக்குழுவினர் மீது கற்களை வீசி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சிறிய இடைவெளி:
இதற்கிடையே மக்களை தேர்தல் வாக்குப்பதிவு, எண்ணிக்கை ஆகியவற்றை முன்னிட்டு, தர்பார் படப்பிடிப்புக்கு சிறிய இடைவெளிவிடப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

வைரலாகும் வீடியோ:
இந்நிலையில், தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று மீண்டும் லீக்காகியுள்ளது. அதில், காவல்துறை காரில் இருந்து ரஜினி வேகமாக இறங்கி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

படக்குழு அப்செட்:
தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மீண்டும் லீக்காக தொடங்கியுள்ளதால் படக்குழு அப்செட்டில் உள்ளது. இதனை எப்படி தடுப்பது என்பது குறித்து, இயக்குனர் முருகதாஸ் உள்ளிட்டோர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இப்படியே போனால், முழுபடமும் ஷாட் பை ஷாட்டாக இணையத்தில் வெளியாகிவிடும் என கோலிவுட் வட்டாரத்தில் கமெண்ட்ஸ் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











