வாவ்.. பிக்பாஸ் 4ல் பங்கேற்கிறார் அந்த நடிகரின் முன்னாள் காதலியான இளம் நடிகை? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் மற்றொரு இளம் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 தொடர்பான இரண்டு புரமோக்கள் வெளியாகி மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இவர்கள்தான் என சில பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது. அதன்படி நடிகைகள் லக்ஷ்மி மேனன், ஷாலு ஷம்மு, கிரண், அம்ரிதா அய்யர் ஆகியோரின் பெயர்களும், நடிகர்கள் லிஸ்ட்டில் ரியோ ராஜ், புகழ், அமுதவாணன், உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.

சனம் ஷெட்டி
இந்நிலையில் பிக்பாஸ் 4ல் நடிகை சனம் ஷெட்டியும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனம் ஷெட்டி பிரபல மாடலாகவும் நடிகையாவும் உள்ளார். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

வாய்ப்பை இழந்தார்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் சனம் ஷெட்டி பங்கேற்பதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிலேயே சனம் ஷெட்டி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் அதில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

தர்ஷனுக்கு வாய்ப்பு
அதனை தொடர்ந்து அவரது காதலரான தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் நடிகை ஷெரினுடன் நெருக்கமாக பழகினார். அதுவே அவரது காதலுக்கு உலை வைத்தது.

திருமணம் செய்ய மறுப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு தர்ஷன் தன்னை அவாய்ட் செய்வதாகவும் தங்களுக்கு ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார்.

பிகினியில் போட்டோ ஷுட்
சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த தர்ஷன், தான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி தன்னுடைய எக்ஸ் பாய் ஃபிரண்டோடு இரவெல்லாம் பார்ட்டி பண்ணியதாகவும், பிகினியில் அவர் போட்டோ ஷுட் நடத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.

இழந்த வாய்ப்பு
இனிமேல் சனம் ஷெட்டியுடன் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார். அவர்களின் காதல் பிரேக் அப்பை தொடர்ந்து தர்ஷன் மற்றும் ஷெரினை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர். இந்நிலையில் கடந்த ஆண்டு சனம் ஷெட்டி இழந்த வாய்ப்பு இந்த ஆண்டு அவருக்கு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











