என் வாழ்க்கையின் சாகச அனுபவங்களில் ஒன்று.. ரஜினியின் திடீர் டிவிட்.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: தான் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அதுகுறித்து டிவிட்டியிருக்கிறார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் தனது 168வது படமான அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி சதீஷ் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.
தற்போது கொரோனா அச்சம் காரணமாக தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஓய்வில் உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மக்கள் ஊரடங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியின் கோரிக்கையின்படி நேற்று மாலை 5 மணிக்கு வீட்டு வாசலில் இருந்தப்படியே மணியோசை எழுப்பி ஆதரவு தெரிவித்தார். அந்த போட்டோக்கள் இன்று வைரலானது.

மேன் வெர்சஸ் வைல்டு
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தான் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அண்ணாத்த படத்தின் ஓய்வுக்கு இடையே நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

புலிகள் சரணாலயம்
இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காட்சியாக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் இயக்குநருமான பியர் கிரில்ஸ் உடன் படங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினியும் பங்கேற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

ட்ரெயிலர்கள்
மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அனுமதி கிடைக்காததால் ஒரே நாளில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்ததில் இருந்து எப்போது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். அவ்வப்போது ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி மோஷன் போஸ்டர்கள், டீசர்கள், ட்ரெயிலர்கள் ஆகியவை வெளியாயின.

ரஜினி டிவிட்
இதனால் கொண்டாடி வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி அதாவது இன்று இரவு 8 மணிக்கு ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியிருக்கிறார்.
நன்றி என் நண்பா..
அதில் என் வாழ்க்கையின் மிகவும் சாகச அனுபவங்களில் ஒன்று !! இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததைப் போலவே நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் !!! வைல்டு வித் பியர் கிரில்ஸ்.. மிக்க நன்றி என் நண்பா" இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
டிவிட்டர் ட்ரென்டிங்
ரஜினிகாந்தின் இந்த டிவிட்டை 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சுமார் 4000 பேர் ரீடிவிட் செய்துள்ளனர். மேலும் #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கையும் ரஜினி ரசிகர்கள் ட்ரென்ட்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப் 4ல் உள்ளது.


Click it and Unblock the Notifications











