For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சினிமா ஃபீல்டுல டைம் மேனேஜ்மென்ட் முக்கியம் - நடிகை நித்யா

  |

  சென்னை: நம்மோட வெற்றிங்கறது தனிப்பட்ட வெற்றி கிடையாது. நம்ம கூட இருக்கிறவங்க கொடுக்குற ஒத்துழைப்புனால கெடைக்கிற வெற்றிங்கறத நம்ம மனசுல வச்சிக்கிடனும்னு நடிகை நித்யா அட்வைஸ் சொல்லியிருக்காங்க.

  இவங்க எத்தனையோ நடிகைங்களுக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும், நடிகை நளினி மேடத்துக்கு கொடுக்குறது தான் ரொம்ப பொருத்தமா இருக்குன் சொல்றாங்க. இதனால நான் யாருக்காவது ஃபோன்ல பேசுனா கூட சொல்லுங்க நளினின்னு தான் சொல்றாங்க.

  புதுசா வர்ற ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இவங்க என்ன சொல்றாங்கன்னா, எந்த விஷயத்தை பண்ணினாலும் அத ரொம்ப் இஷ்டப்பட்டு இன்வால்வ் ஆகி பண்ணுங்க. அதுக்குண்டான பலன் இன்னிக்கே கெடைக்கும்னு எதிர்பாக்காதீங்க. அதுக்கு இப்ப பலன் கெடைக்காட்டியும் பின்னாடி கிடைக்கும்.

  பேக்கிரவுண்ட் பாட்டு

  பேக்கிரவுண்ட் பாட்டு

  1982ஆம் வருஷம் நடிகர் திலகம் சிவாஜி சார் நடிச்ச தீர்ப்புங்குற படம். அந்தப் படத்த தமிழ்நாட்டுல யாராலயும் மறக்கவே முடியாது. அந்தப் படத்துல சிவாஜி சாருக்கு மகளா நடிச்ச கேரக்டர் சூசைட் பண்ணி செத்துருவாங்க. அப்போ பேக்கிரவுண்ட்ல ஒரு பாட்டு ஒண்ணு கேட்கும்.

  மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆச்சி

  மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆச்சி

  ஆளுக்கொரு தேதி வச்சி ஆண்டவன் அழைப்பான், அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான் அப்பின்னு. அந்தப் பாட்ட அந்தக் காலத்துல வீட்டுல சும்மா கூட முணுமுணுக்க விடமாட்டாங்க. அப்பிடி பாடுனா வீட்டுல கெட்டது நடந்துடும்னு. அந்த அளவுக்கு அந்த பாட்டு மக்கள்கிட்ட ரீச் ஆச்சுது. தீர்ப்பு படத்துல சிவாஜி சார் மகளா நடிச்சது நம்ம நடிகை நித்யா தாங்க. இப்போதைக்கு இவங்க நடிச்ச இன்னோரு மறக்க முடியாத படம் பாக்கியராஜ் சார் கூட நடிச்ச தாவணிக் கனவுகள்.

  பொருத்தமான முக லட்சணம்

  பொருத்தமான முக லட்சணம்

  இன்னிக்கு சின்னத்திரை சீரியல்ல அம்மாவா நடிக்குறதுக்கு ரொம்ப பொருத்தமான முக லட்சணம் உள்ளவங்க. இவங்க நம்ம பிலிமிபீட்டுக்கு செம ஜாலியா ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க. அதுல அவங்க நெறய விஷயம் சொல்லியிருக்காங்க. மொத மொதல்ல மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர் கூட நடிச்சிருக்காங்க. அப்புறமா தெலுங்குல நாகேஸ்வரராவ், அப்புறம் சிரஞ்சீவி சார் கூடயும் நடிச்சிருக்காங்க. சுருக்கமா சொல்லப் போனா தெலுங்குல இருக்குற ஹீரோங்க எல்லார் கூடயும் அதிக படங்கள்ல நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க.

  டைரக்டர் பி.வாசு அட்வைஸ்

  டைரக்டர் பி.வாசு அட்வைஸ்

  ஒரு காலத்துல ரொம்ப பிஸியான நடிகையா இருந்த இவங்க திடீர்னு திரைத்துறையைச் சேர்ந்த அசிஸ்டென்ட் டைரக்டர் ரவீந்தரை கல்யாணம் பண்ணிட்டு கொஞ்ச காலம் சினி ஃபீல்ட விட்டு ஒதுங்கி இருந்தாங்க. அப்போ டைரக்டர் பி.வாசு சார் தான் இவங்க வீட்டுல சும்மா உட்காந்துகிட்டு இருக்குறத கேள்விப்பட்டு நம்ம திறமையை எப்பவும் மெருகேத்திக்கிட்டே இருக்கணும் அப்பிடின்னு அட்வைஸ் சொல்லி படங்களுக்கு டப்பிங் பண்ண சொன்னாரு.

  நடிகை கம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

  நடிகை கம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

  அதுக்கப்புறமா திரும்பவும் இந்த திரைத் துறையில ரீஎன்ட்ரி ஆனாங்க. இவங்க மொத மொதல்ல டப்பிங் வாய்ஸ் கொடுத்தது நடிகை ரூபினிக்கு தான். இப்பிடி தான் நடிகையா இருந்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா ஆனது. இருந்தாலும் கூட ரெண்டு வேலையையும் ஒரே மாதிரிதான் பாக்குறேன். நடிப்புக்கு நா எந்த அளவுக்கு முக்கியத்துவம் குடுக்குறேனோ அதே அளவுக்கு டப்பிங்குக்கும் குடுக்குறேன் அப்பிடின்னு சொல்றாங்க.

  யாரு நளினியா பேசுறது

  யாரு நளினியா பேசுறது

  இவங்க எத்தனையோ நடிகைங்களுக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும், நடிகை நளினி மேடத்துக்கு கொடுக்குறது தான் ரொம்ப பொருத்தமா இருக்குன்னு சொல்றாங்க. இதனால நான் யாருக்காவது ஃபோன்ல பேசுனா கூட சொல்லுங்க நளினின்னு தான் சொல்றாங்க. அதே மாதிரி தான் ஷீமா அம்மாவுக்கும். நான் யாருக்கு டப்பிங் குடுக்குறேனோ அவங்க முகம் தான் படம் பாக்குறவங்களுக்கு ஞாபகம் வரணுமே தவிர என்னோட ஞாபகம் வரக்கூடாதுன்னு. அது தான் என்னோட தொழிலுக்கும் நான் கொடுக்குற அங்கீகாரம் அப்பிடின்னு சொல்றாங்க.

  சிவாஜி சார் கூட நடிச்சது பெருமை

  சிவாஜி சார் கூட நடிச்சது பெருமை

  அதே மாதிரி சிவாஜி சார் கூட தீர்ப்பு படத்துல நடிச்சத என்னால மறக்கவே முடியாது. அவ்வளவு பெரிய லெஜண்ட்களோட நடிச்சத நெனெக்கிறப்போ ரொம்ப ஆச்சரியமாவும் பெருமையாவும் இருக்குன்னு சொல்றாங்க.

  டைம் மேனேஜ்மென்ட்

  டைம் மேனேஜ்மென்ட்

  இவங்க டைம் மேனேஜ்மென்ட்ல ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்குறதுக்கு, இவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கொடுக்குற ஒத்துழைப்புதான் காரணம். இவங்களோட வீட்டுக்காரர், மாமியார், இவங்க சன், டாட்டர் எல்லாரும் எனக்கு நல்லா கோ-ஆப்பரேட் பண்றதுனாலதான் என்னால டைம் லிமிட் மெய்ன்டெய்ன் பண்ண முடியுது.

  தனிப்பட்ட வெற்றி கிடையாது

  தனிப்பட்ட வெற்றி கிடையாது

  இதுல முக்கியமா என்ன சொல்றாங்கன்னா, ஒருத்தரோட சக்ஸஸ்ங்குறது அவங்களோட தனிப்பட்ட சக்ஸஸ் கெடையாது. அவங்கள சுத்தி இருக்குறவங்க கொடுக்குற ஒத்துழைப்புனால தான் அந்த வெற்றி கெடைக்குதுங்குறத நாம என்னிக்கும் மறக்கவே கூடாது. அதே மாதிரி அவங்க கொடுக்குற சப்போர்ட்ல தான் என்னால ஒர்க்ல ஹன்ட்ரட் பெர்சன்ட் கான்சன்ட்ரேட் பண்ண முடியுதுன்னு நித்யா மேடம் சொல்றாங்க.

  சக்ஸஸ் கிடைக்கும்

  சக்ஸஸ் கிடைக்கும்

  புதுசா வர்ற ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இவங்க என்ன சொல்றாங்கன்னா, எந்த விஷயத்தை பண்ணினாலும் அத ரொம்ப் இஷ்டப்பட்டு இன்வால்வ் ஆகி பண்ணுங்க. அதுக்குண்டான பலன் இன்னிக்கே கெடைக்கும்னு எதிர்பாக்காதீங்க. அதுக்கு இப்ப பலன் கெடைக்காட்டியும் பின்னாடி கிடைக்கும். ஃபீல்டுக்கு வந்த உடனே பெரிய ஆளாகனும் எதிர்பாக்காதீங்க. நெறைய விஷயத்த கத்துக்கணும். இந்த ஃபீல்ட பத்தி தெரிஞ்சக்கணும். இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தோம்னா அதுக்கப்புறம் தான் நமக்கு சக்ஸஸ் கெடைக்கும்னு நித்யா மேடம் சொல்றாங்க.

  English summary
  Our success is no personal victory. Always we should bear in mind that the cooperation of those who are with us, said Nithya Ravindran.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X