சினிமா எடுக்க அரசியல் செய்ய தெரிந்திருக்கணும்: ஓம் சாந்தி ஓம் தயாரிப்பாளர்
சென்னை: சினிமா எடுக்க அரசியல் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என ஓம் சாந்தி ஓம் பட தயாரிப்பாளர் அருமை சந்திரன் தெரிவித்துள்ளார்.
சூர்ய பிரபாகர் எழுதி, இயக்கியுள்ள படம் ஓம் சாந்தி ஓம். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நீலம் உபத்யாய நடித்துள்ளார்.
2013ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்த ஆண்டு படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

கம்போடியா
கம்போடியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய இந்து கோவிலான அங்கோர் வாட்டில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

சீரியஸ், காமெடி
ஓம் சந்தி ஓம் படத்தில் காமெடியுடன் சேர்த்து 2 முக்கியமான விஷயங்கள் பற்றி பேசுகிறார்களாம்.

அரசியல்
நான் சினிமாவுக்கு புதுசு. எந்த தொழிலை செய்யவும் அனுபவத்துடன் தொழில்நுட்ப அறிவு இருந்தால் போதும். ஆனால் சினிமா எடுக்க அரசியல் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்று ஓம் சாந்தி ஓம் தயாரிப்பாளர் அருமை சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஞானம்
கடலில் போட்டதை கடலில் தேட வேண்டும் என்பது போல நான் சினிமாவில் போட்டதை சினிமாவிலேயே தேடுகிறேன். இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் சந்திரன்.


Click it and Unblock the Notifications











