வாரிசு படத்தோட சூட்டிங் ஒருபுறம்.. டப்பிங் மறுபுறம்.. மாஸ் காட்டும் விஜய்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளது.

படத்தின் பாடல் காட்சிகள் வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் ராஷ்மிகா மந்தனா இதில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளையும் படக்குழு ஒருபுறம் செய்து வருகிறது.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது. படத்தில் இன்னும் ஒரு பாடல் மற்றும் சில பேட்ச் வேலைகளே மீதமுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இந்தப் பாடல் காட்சி வரும் 17ம் தேதி சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது.

இணையத்தில் லீக்கான காட்சிகள்

இணையத்தில் லீக்கான காட்சிகள்

படத்தின் துவக்கத்திலிருந்தே இந்தப் படத்தின் சூட்டிங் காட்சிகள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியாகி வரும் சூழலில் படத்தின் சூட்டிங் பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பாடல் காட்சியும் பலத்த பாதுகாப்பிற்கிடையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

29ம் தேதியுடன் சூட்டிங் நிறைவு

29ம் தேதியுடன் சூட்டிங் நிறைவு

தற்போது மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ள ராஷ்மிகா மந்தனா இந்தப் பாடல் சூட்டிங்கில் பங்கேற்பாரா அல்லது விஜய்யின் மாஸ் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதா என்பது குறித்து படக்குழு விரைவில் தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் சூட்டிங் இம்மாதம் 29ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டப்பிங்கை துவங்கிய விஜய்

டப்பிங்கை துவங்கிய விஜய்

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளையும் மறுபுறம் படக்குழு மேற்கொண்டு வருகிறது. படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ள நிலையில், தற்போது விஜய் தனக்கான டப்பிங் போர்ஷனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்திற்கான பிரமோஷன்களில் கலந்துக் கொள்ளவும் விஜய் டேட்ஸ் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

துபாயில் பிரமோஷன் நிகழ்வு

துபாயில் பிரமோஷன் நிகழ்வு

துபாயில் நடைபெறும் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அவ்வாறு நடைபெற்றால் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்கலாம் என்று இப்போதே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தத்தில் இந்த பொங்கல், விஜய்யின் மாஸ் பொங்கலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

துணிவு படத்தின் டப்பிங் பணிகள்

துணிவு படத்தின் டப்பிங் பணிகள்

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் -அஜித் படங்கள் ஒரே நேரத்தில் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இரண்டு படங்களும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. விஜய் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதை போலவே அஜித் படத்தின் டப்பிங் வேலைகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X