ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார்.. பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் அசத்தல் ட்வீட்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு அதிர்ஷ்ட காற்று பலமாக வீசி வருகிறது.
பியார் ப்ரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தனுசு ராசி நேயர்களே படம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து தனுசு ராசி நேயர்களே டீஸரை காண்பித்து ஆசி பெற்றுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

9 ஆண்டுகள்
அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் தான் ஹரிஷ் கல்யாணும் அறிமுகமானார். 2010ம் ஆண்டு வெளியான அந்த படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர், பொறியாளன், வில் அம்பு படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாணுக்கு திரைத்துறையில் பெரிய இடம் கிடைக்கவில்லை.

பிக்பாஸ்
சினிமாவில் தனக்கான நேரம் வரும் என காத்திருந்த ஹரிஷ் கல்யாணுக்கு பிக்பாஸ் முதல் சீசன் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. பிக்பாஸ் முதல் சீசனில் ரைசா வில்சனுடன் ஏற்பட்ட நட்பு, பிக்பாஸ் படத்திற்கு பிறகு ஹரிஷ் நடிப்பில் வெளியான பியார் ப்ரேமா காதல் படத்தில் ரைசாவை நாயகியாக மாற்றியது.

யுவன் மேஜிக்
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் ப்ரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு சூப்பரான ஆல்பத்தையும் யுவன் போட்டு அசத்தினார். அந்த பாடல்கள் இளைஞர்களை வெகுவாக கவர, ஹரிஷ் கல்யாணுக்கு அதிகளவிலான ரசிகைகள் கிடைத்துள்ளனர். எல்லாம் யுவனின் மேஜிக் தான்.
தனுசு ராசி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோவாக செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து, ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். வரும் டிசம்பர் 6ம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தனுசு ராசி நேயர்களே படம் வெளியாகிறது. இந்த படத்தை சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

சிங்கப்பெண்
பிகில் படத்தில் ஆசிட் வீசப்பட்ட அனிதா கதாபாத்திரத்தில் நடித்த ரெபா மோனிகா ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், டிகாங்கனா சூர்யவன்சியும் இந்த படத்தில் ஹரிஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஒரே சந்திரன் ஒரே சூரியன்
தனுசு ராசி நேயர்களே படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், சந்தான பாரதி தனது மகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸரை ரஜினிகாந்திடம் காண்பித்துள்ளார். அப்போது உடன் சென்ற நாயகன் ஹரிஷ் கல்யாண், ரஜினியிடம் ஆசி பெற்றுள்ளார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹரிஷ், "ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார். தலைவரிடம் ஆசி பெற்றபோது ! A moment to be cherished for the remaining of my life. Thank you" என நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











