பசங்கள மொத்தமா வெறுக்குற ஒருதரால தான் இப்படி எழுத முடியும்.. ட்ரெண்டாகும் ஐயோ சாமி ஆல்பம் பாடல்!
சென்னை: விஜய் ஆண்டனியின் "நான்" திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார்.
பொத்துவில் அஸ்மின் ஏற்கனவே விஸ்வாசம், அண்ணாத்த படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின. ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"ஐயோ சாமி நீ எனக்கு வேணாம், பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்" என்று துவங்கும் இந்த பாடல் தற்போது பலரின் கவனம் ஈர்த்து வருகிறது.

விஜய் ஆண்டனி பாடல்
2012 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் சித்தார்த் வேணுகோபால், ரூபா மஞ்சரி, அனுயா போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். படத்திற்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் "தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடல் மிகவும் பிரபலமானது. சிறு கதாபாத்திரங்களிலும் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு இந்த படத்தின் மூலம் ஹீரோ என்ற அறிமுகம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்கள்
அஸ்மின், முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படங்களுக்கும் ப்ரோமோ பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எழுதியுள்ள "ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்" என்ற ஆல்பம் பாடல் தற்போது ட்ரெண்டாகி கொண்டு இருக்கின்றது.

ஆல்பம் பாடல்கள்
சமீபகாலமாகவே ஆல்பம், பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. சமீபத்தில் என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. சந்தோஷ் நாராயாணன் இசையில், தீ மற்றும் அறிவு இந்த பாடலை பாடி இருந்தனர். இந்த பாடல் வெளிவந்த நாள் முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலை ரசிக்காதவர்கள் இல்லை. கிட்டத்தட்ட அதே கான்செப்டில் உருவாகி இருக்கிறது இந்த ஐயோ சாமி பாடல்.

மொழி புரியாத பாடல்
பாடலுக்கு இசையமைத்துள்ளார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக. பாடலைப் பாடியுள்ளார் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க. மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட "மனிகே மகே ஹித்தே" பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











