"கெட்டவன்" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா?- சிம்பு ரசிகர்கள் கோபம்
Recommended Video

சென்னை: கெட்டவன் மீ டூ என்று நடிகை லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். பாலிவுட் சென்ற இடத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
மேலும் தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
கெட்டவன்
தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை லேகா எப்பொழுது வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் "கெட்டவன்" மீ டூ என்று ட்வீட் செய்துள்ளார்.
கோபம்
சிம்புவின் கெட்டவன் படத்தில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இந்நிலையில் அவர் கெட்டவன் என்றதும் சிம்புவை தான் கூறுகிறார் என்று நினைத்து அவரின் ரசிகர்கள் கோபம் அடைந்து லேகாவை விளாசி வருகின்றனர்.
புகழ்
வாழ்க்கையில் தோல்வி அடைந்த லேகா சிம்புவின் பெயரை பயன்படுத்தி பிரபலமாக பார்க்கிறார். உண்மை என்றால் கெட்டவன் பற்றி என்னவென்று சொல்லவும். சவால் விடுகிறேன் என்று சிம்பு ரசிகர் தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்ஸ்
லேகா கெட்டவன் என்று சிம்புவை தான் கூறுகிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள். லேகாவின் ட்வீட்டை பார்த்துவிட்டு அவர் பப்ளிசிட்டி தேடுவதாகக் கூறி சிம்பு ரசிகர்கள் திட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











