Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ரொம்ப தூரம் போயிட்டியா ராம் - 96 ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்
96 படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனாலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல பள்ளிகளில் ரீயூனியன் நடக்க காரணம் அந்த படம்தான் என்றால் மிகையாகாது.
சென்னை: 96 படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அந்த படக்குழுவினர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 96 படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனாலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல பள்ளிகளில் ரீயூனியன் நடக்க காரணம் அந்த படம்தான் என்றால் மிகையாகாது.
96 என்றவுடன் நமது நினைவுக்கு வருவது த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் தான். பள்ளி பருவ காதல் அதற்கு பின் ஏற்படும் பிரிவு பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் காதலர்கள் அவர்களுக்குள் இருக்கும் தீரா காதல் அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை மீண்டும் பிரிவு என ஒரு இறுக்கமான காதல் கவிதை தான் 96.
கடந்த ஆண்டு அக்டோபர் 4 இதே நாளில் வெளியாகி மிக பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது. 96 படம் ரீலிஸாகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. நேற்றிலிருந்து ஒன் இயர் ஆப் 96 என்ற ஹாஸ்டேக் இணையத்தில் டிரென்ட் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி ராமாகவும் ஆதித்யா பாஸ்கர் சிறு வயது ராமாகவும் த்ரிஷா ஜானுவாகவும் கௌரி சிறு வயது ஜானுவாகவும் நடித்து ப்ரேம் குமார் இயக்கிய படம் 96. தற்போது 96ன் நினைவுகளை பகிரும் நோக்கில் படக்குழு லைப் ஆப் 96 என்ற வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவும் படத்தை போல சிறு ஹைகூவாக மனதின் காதல் பக்கங்களை தட்டி எழுப்பியுள்ளது. இதயத்துடிப்பின் லப் டப் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரொம்ப தூரம் போயிட்டியா ராம் என்ற ஜானுவின் குரல் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் 96 போஸ்டரை பதிவேற்றம் செய்து நன்றி தெரிவித்து உள்ளனர்.
A year from now and I’m still smiling💛#OneYearof96 #OneYearOfClassic96
— Trish (@trishtrashers) October 4, 2019
Thank you @Premkumar1710 @VijaySethuOffl @govind_vasantha #team96 pic.twitter.com/B8sBNPmY73
96 படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கு கன்னடம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் கணேஷ் மற்றும் பாவனா சேர்ந்து சேதுபதி த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . தெலுங்கில் சமந்தா மற்றும் சர்வனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.சர்வானந்த் தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!