தமிழ் சினிமாவின் தங்கல்.. ஓராண்டை நிறைவு செய்த கனா.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹேப்பி ட்வீட்!

சென்னை: தமிழ் சினிமாவில் வெளியான பல ஸ்போர்ட்ஸ் படங்களில், விளையாட்டு ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நிறைவை கொடுத்த படம் என்றால் அது கனா மட்டும் தான்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான கனா திரைப்படம் இன்றுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு கனா படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் செம்ம ஹேப்பியாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #OneYearOfKanaa ஹாஷ்டேக்கை உருவாக்கி கனாவை கொண்டாடி வருகின்றனர்.

வெரி ஸ்பெஷல்

கனா படத்தின் மூலம் முதன்முறையாக ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கெளசல்யா முருகேசனாக நடித்து அசத்தினார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், கனா தனக்கு வெரி ஸ்பெஷல் படம் என ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

100 வருஷம் ஆனாலும்

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழே, 100 வருஷம் ஆனாலும், மக்கள் மனதில் நிற்கும் படம் கனா என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

கெளசல்யா முருகேசன்

பெண் கிரிக்கெட்டர் கெளசல்யா முருகேசனாக வாழ்ந்திருப்பார் கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான வடசென்னை மற்றும் கனா ஆகிய இரு படங்களும் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தின.

டபுள் செலிபிரேசன்

கனா படம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது மற்றும் ஹீரோ படம் ரிலீஸ் ஆகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தற்போது டபுள் செலிபிரேசன் என ட்வீட் போட்டுள்ளார் இந்த ரசிகர்.

நெல்சன் திலீப் குமார்

கனா படத்தை தயாரித்தது மட்டுமின்றி நெல்சன் திலீப் குமார் என கிரிக்கெட்டராகவும் கிரிக்கெட் கோச்சாகவும் வந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தூணாக இருந்த சிவகார்த்திகேயனின் ரோலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ரசிகரும் நெல்சன் திலீப் குமார் தனக்கு பிடித்த ரோல் என்றும், ஐஸ்வர்யா ராஜேஷை இந்த படத்தில் தான் பிடித்தது என்றும் ட்வீட் போட்டுள்ளார்.

உன்னை வெல்ல யாரும் இல்ல

"உன்னை விட்டால் உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்ல என்று சொல்ல நீ இன்று வா" என கனா படத்தின் உணர்ச்சிகளை கிளப்பும் பாடல் வரிகளை பகிர்ந்து இந்த நெட்டிசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்

இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும், எதை சொல்ல நினைச்சாலும் ஜெயிச்சுட்டு சொல்லு என சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிளைமேக்ஸ் காட்சியில் சொல்லும் அட்வைஸ் வசனம் பலருக்கும் கூஸ் பம்ப்ஸை ஏற்படுத்தியது. அந்த வசனத்தை போட்டு இந்த ரசிகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கோடான கோடி நன்றிகள்

டிசம்பர் 21ம் தேதி கனா படம் கடந்த ஆண்டு வெளியானது. தற்போது ஒரு வருடத்தை கடந்துள்ளது. இளைஞர்களுக்கு அருமையான இன்ஸ்பிரேஷன் இந்த படம் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X