ஒன்இந்தியா கருத்துகணிப்பு: 2018ம் ஆண்டின் சிறந்த நடிகை நயன்தாரா

By Siva

சென்னை: ஒன்இந்தியா கருத்துகணிப்பின்படி 2018ம் ஆண்டின் சிறந்த நடிகை நயன்தாரா தான்.

2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2018ம் ஆண்டின் சிறந்த நடிகை யார் என்று ஒன்இந்தியா இணையதள வாசகர்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.

வாசகர்கள் அளித்த வாக்குகளின்படி சிறந்த நடிகைகள் பட்டியலை வெளியிடுகிறோம்.

நயன்தாரா

நயன்தாரா

2018ம் ஆண்டின் சிறந்த நடிகை நயன்தாரா என்கிறார்கள் ஒன்இந்தியா வாசகர்கள். லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுக்கு 44.59 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. எத்தனை பேர் வந்தாலும் நயன்தாரா இடம் அவருக்கு மட்டும் தான்.

த்ரிஷா

த்ரிஷா

2018ம் ஆண்டின் சிறந்த நடிகைகள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார் த்ரிஷா. 96 படம் தான் அதற்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. அவருக்கு 17.31 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

 கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

த்ரிஷாவை அடுத்து கீர்த்தி சுரேஷுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. கீர்த்தி நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகின.

 சாய் பல்லவி

சாய் பல்லவி

சிறந்த நடிகைகள் பட்டியலில் சமந்தாவுக்கு 4வது இடமும், சாய் பல்லவிக்கு 5வது இடமும், ப்ரியா பவானி சங்கருக்கு 6வது இடமும், சயீஷாவுக்கு 7வது இடமும், ஏமி ஜாக்சனுக்கு 8வது இடமும், காஜல் அகர்வாலுக்கு 9வது இடமும், ராஷி கன்னாவுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X