Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்னும் 14 நாட்கள் தான் இருக்கு...மீனா வீட்டில் இப்படியொரு தாங்க முடியாத சோகம்
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் நடிகையாக இப்போது வரை வலம் வந்து கொண்டிருப்பவர் மீனா. ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
டாப் ஹீரோயினாக இருந்த மீனா தற்போது பிரபலமான துணை நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் மீனா.
மீனா
கணவர்
மரணம்..புறா
எச்சம்
மூலம்
நுரையீரலை
பாதிப்பு
வருமா?

மீனாவின் கணவர் மரணம்
இந்நிலையில் நேற்று மாலை அவரது கணவர் வித்யாசாகர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் வித்யாசாகர். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இது தான் மரணத்திற்கு காரணமா
டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமடைந்து, ஆபத்தான நிலைக்கு சென்றதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி
ரஜினிகாந்த், சரத்குமார், பிரபுதேவா, ரம்பா, விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரிலும், சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் மீனாவை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய நிலையில், இன்று நேரில் வந்து வித்யாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். தமிழக அரசின் சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நேரில் வந்து ஆறுதல் கூறி உள்ளார்.

இன்னும் 14 நாட்கள் தான் இருக்கு
வித்யாசாகருக்கும், மீனாவிற்கும் 2009 ம் ஆண்டு ஜுலை 12 ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளனர். இவர்களின் திருமண நாளுக்கு இன்னும் 14 நாட்கள் தான் உள்ளது. இந்த சமயத்தில் இப்படி ஒரு தாங்க முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

கலங்க வைக்கும் மீனாவின் போஸ்ட்
இந்நிலையில் கடந்த ஆண்டு திருமண நாளன்று, தங்களின் திருமண வரவேற்பு போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த மீனா, நீங்கள் என் வாழ்க்கையில் வானவில் போல் வந்தீர்கள். நீங்கள் வந்த பிறகு வாழ்க்கையே கலர்ஃபுல்லாகி விட்டது என குறிப்பிட்டிருந்தார். மீனாவின் இந்த பழைய போஸ்ட்டை குறிப்பிட்டு ரசிகர்கள் பலர் சோகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.