கரடியே காரித்துப்பிய நிலையில் கங்கனா ரனாவத் படம்.. இந்தியா முழுவதும் 20 டிக்கெட் தான் வித்துச்சாம்!
மும்பை: பாலிவுட் பற்றி அத்தனை நெகட்டிவிட்டிகளை பரப்பி வந்த நடிகை கங்கனா ரனாவத்தின் தாக்கட் படத்தை பார்க்க தியேட்டரில் வெறும் 20 பேர் கூட இல்லாத பரிதாப நிலை உருவாகி உள்ளது.
80 கோடி ரூபாயை கொட்டிக் கரியாக்கியது தான் மிச்சம் என்றும் குறைவான பட்ஜெட்டில் நல்ல கதையை தேர்வு செய்யாமல் போனது தான் இத்தனை பெரிய பேரிழப்புக்கு காரணம் என பாலிவுட் வட்டாரமே கங்கனா ரனாவத்தை பார்த்து பயங்கரமாக கிண்டல் செய்து வருகிறது.
8வது நாளிலேயே படத்தை பார்க்க 20 டிக்கெட்டுகள் மட்டுமே இந்திய அளவில் விற்பனை ஆகி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கங்கனா ரனாவத் புதிய படம்
கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான Dhaakad திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் டிசாஸ்டர் ஆகி உள்ளது. முதல் நாளிலேயே 50 லட்சம் கூட இந்தியளவில் வசூலிக்க முடியாமல் தவித்த இந்த திரைப்படம் 8வது நாளுடன் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் அதிரடியாக தூக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதுக்கு 80 கோடி
தலைவி படம் மண்ணைக் கவ்விய நிலையில், 80 முதல் 100 கோடி பட்ஜெட்டில் ஆக்ஷன் படத்தை எடுத்து பாலிவுட்டையே ஓட விடுகிறேன் பார் என சவால் விட்ட கங்கனா ரனாவத் நடித்த காவிய திரைப்படமான தாக்கட் 8வது நாளிலேயே திரையரங்குகளை விட்டு அதிரடியாக காலி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

வெறும் 20 டிக்கெட்
3 நாட்களிலேயே படத்தை நாடு முழுவதும் 90 சதவீத தியேட்டர்களில் இருந்து தூக்கி அடித்து விட்டனர். இந்நிலையில், ஓடிய ஒரு சில தியேட்டர்களில் 8வது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது தான் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

8வது நாள் வசூல்
முதல் நாளில் 50 லட்சம் வசூலை அள்ளிய கங்கனா ரனாவத்தின் தாக்கட் திரைப்படம் 8வது நாளில் அந்த 20 புண்ணியவான்கள் டிக்கெட் வாங்கிய நிலையில், 4,420 ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் கங்கனா ரனாவத் தலையில் மட்டுமல்ல இந்த படத்தை தயாரித்த தீபக் முகுத் மற்றும் சோஹைல் மக்லாய் தலையிலும் சேர்த்து இடி இறங்கி இருப்பதாக பாலிவுட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதுவரை மொத்தமாக படம் 3 கோடி வசூலுடன் முடங்கிப் போய்விட்டதாக கூறுகின்றனர்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
சினிமாவில் இருந்து கொண்டு தான் மட்டும் தான் நேர்மையானவர், மொத்த பாலிவுட்டும் மோசம் என ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகளை பரப்பி வந்த கங்கனா ரனாவத்துக்கு இது தக்க பதிலடி என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஓஹோ இதுக்கு பேர் தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்களா? என தமிழ் சினிமா ரசிகர்களும் தலைவி நடிகை கங்கனா ரனாவத்தின் பரிதாப நிலையை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











