முதலில் நிலைமை சரியாகட்டும்...புதிய படங்களில் கையெழுத்திட தயங்கும் திரிஷா

சென்னை : கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறத்தப்பட்டதால் தனது குடும்பத்தினர் மற்றம் செல்ல பிராணிகளுடன் பொழுதை இனிமையாக செலவிட்டு வருகிறார் நடிகை திரிஷா. அத்துடன் தனது அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்காக மிக கடுமையாகவும், கூடுதல் நேரமும் ஒர்க் அவுட் செய்து வருகிறார் திரிஷா.

இந்த கடிமையான சமயத்திலும் நிறைய நேர் திரிஷாவை தேடிச் சென்று கதை கூறி வருகின்றனர். ஆனால் புதிய படங்கள் எதற்கும் ஓகே சொல்லும் மனநிலையில் திரிஷா இல்லையாம். தற்போதுள்ள அசாதாரண சூழல் சரியான பிறகே புதிய படங்களை ஒப்புக் கொள்ளலாம் என்ற முடிவில் திரிஷா இருப்பதாக கூறப்படுகிறது.

ராங்கிக்காக காத்திருக்கும் திரிஷா

ராங்கிக்காக காத்திருக்கும் திரிஷா

தற்போது தான் நடித்த ராங்கி படத்தின் ரிலீசுக்காக திரிஷா காத்திருக்கிறார். டைரக்டர் சரவணன் இயக்கி உள்ள இந்த படம்,ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கவே திரிஷா அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.

ஓடிடி.,யில் ரிலீசாகிறதா ராங்கி

ஓடிடி.,யில் ரிலீசாகிறதா ராங்கி

இதனால் அடுத்து அவர் நடிக்க போகும் படமும் ஹீரோயினை மையமாக கொண்ட கதையாக தான் இருக்கும் என்றும், இது தெலுங்கு அல்லது மலையாள மொழி படங்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷா நடித்துள்ள ராங்கி படத்தை பிரபலமான ஓடிடி தளம் ஒன்றில் விரைவில் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனமும், தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்கள்.

 நிலைமை சரியாகட்டும்

நிலைமை சரியாகட்டும்

இதற்காக அந்த ஓடிடி தளத்துடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. ராங்கி படத்தின் ரிலீசுக்கு பிறகு, கொரோனா நிலைமை சரியான பிறகே புதிய படத்திற்கு ஓகே சொல்ல போகிறாராம் திரிஷா.

பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ஆசை

பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ஆசை

அப்படி அவர் ஓகே சொல்லும் படம் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவுடன் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவை வைத்து டைரக்டர் கோபிசந்த் மலினானி இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க திரிஷாவை அணுகி உள்ளனர்.

குழப்பிய குந்தவை போஸ்டர்

குழப்பிய குந்தவை போஸ்டர்

தெலுங்கு பட ஆஃபர்கள் திரிஷாவிற்கு குவிந்து வரும் நிலையில், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக சமீபத்தில் ஒரு வதந்தி பரவியது. சோழ ராணியாக திரிஷா நிற்பது போன்ற போஸ்டர் வெளியானதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. இதனால் திரிஷாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு, அவரது ரோல் பற்றி தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X