»   »  மோசமான நடிகைகள் தான் படுக்கைக்கு போவார்கள்: பிரபல நடிகர் பகீர் பேட்டி

மோசமான நடிகைகள் தான் படுக்கைக்கு போவார்கள்: பிரபல நடிகர் பகீர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சினிமாவில் மோசமான பெண்கள் வாய்ப்புக்காக படுக்கைக்கு போவார்கள் என்று பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் வாய்ப்பு பெற பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. படுக்கைக்கு அழைப்பது குறித்து மெல்ல மெல்ல ஒவ்வொரு நடிகையாக வெளியே கூறத் துவங்கியுள்ளனர்.

நம்ம சரத்குமார் மகள் வரலட்சுமி கூட தன்னிடம் தகாத முறையில் பேசியவரை சமூக வலைதளத்தில் அசிங்கப்படுத்தினார்.

மலையாள திரையுலகம்

மலையாள திரையுலகம்

மலையாள திரையுலகில் பெண்களை படுக்கைக்கு அழைப்பது அதிகம் என்று பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். நடிகைகள் பார்வதி மேனன், சார்மிளா ஆகியோர் இது குறித்து பேட்டி கூட அளித்துள்ளனர்.

இன்னொசென்ட்

இன்னொசென்ட்

மலையாள திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை. அப்படி எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. மோசமான பெண்கள் தான் வாய்ப்புக்காக படுக்கைக்கு போவார்கள் என்று மலையாள நடிகர் இன்னொசென்ட் தெரிவித்துள்ளார்.

அம்மா

அம்மா

பிரபலமான காமெடி நடிகரான இன்னொசென்ட் கேரள மாநில எம்.பி.யாக உள்ளார். மேலும் மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபம்

கோபம்

பெண்களை பற்றி இன்னொசென்ட் தரக்குறைவாக பேட்டி அளித்துள்ளது பலரையும் கோபம் அடைய வைத்துள்ளது. மலையாள நடிகைகள் இன்னொசென்ட்டுக்கு எதிராக ஏற்கனவே சமூக வலைதளங்களில் கொந்தளிக்கத் துவங்கிவிட்டனர்.

English summary
Popular Malayalam actor Innocent said that casting couch doesn't exist in the malayalam film industry and actresses who are bad may share the bed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil