அதிமுக + திமுக கூட்டணி வைத்தால் தான் விஜய்யை வீழ்த்த முடியும்.. கலாய்க்கும் விஜய் ஃபேன்ஸ்!
சென்னை: மொத்த தமிழ்நாடும் சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து தான் பேசி வருகிறார்கள். இப்படி இருக்கையில் இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என மொத்தமாக நான்கு முனைப் போட்டியாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் குறித்த ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை வரும் போதும், விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.
குறிப்பாக சமூக வலைதளப் பக்கங்களில் விஜய் ரசிகர்கள், வழக்கம் போல் திமுக மற்றும் அதிமுகவை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் சிலர் மீம்ஸ்கள் போட ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக விஜய் தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு செல்வது போலவும், அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் சிலரோ, வரும் காலங்களில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைத்தால் தான் விஜய்யை வீழ்த்த முடியும் போல என்றும் தெரிவித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், இந்த தேர்தலியேயே அதுதான் நிலைமை போல என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

விஜய் 10 முதல் 15 சதவீத வாக்குகளை வாங்குவார் என்று பலரும் தெரிவித்திருந்த நிலையில் விஜய் வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில சுற்றுகளுக்குள்ளாகவே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல், " ஆசீர்வதிக்கப்பட்ட தலைவன் எங்கள் விஜய், அண்ணா எம்ஜிஆர் விஜய் வரலாறு மீண்டும் திரும்பி இருக்கிறது இளைஞர்களின் மாபெரும் ஆதரவில்" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், அவரது ரசிகர்கள் தொண்டர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். பல இடங்களில் இப்போதே இனிப்புகள் வழங்க எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கட்சிக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு என்பது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதேபோல் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications