லிப் கிஸ் மட்டும் தான் இருக்கு.. படத்துல ஒண்ணுமே இல்லை.. ஃபேமிலி ஸ்டாரை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!
சென்னை: பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் ஃபேமிலி ஸ்டார் படம் வெளியானது. கீதா கோவிந்தம் படத்தை இயக்கி விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் மிகப்பெரிய இடத்தை சினிமா உலகில் பெற்றுத்தந்தவர் பரசுராம்.
ஆனால், அதன் பின்னர் அவர் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனியை வைத்து இயக்கிய சர்காரு வாரி பாட்டா சறுக்கிய நிலையில், மீண்டும் வான்டட்டாக சென்று விஜய் தேவரகொண்டா சிக்கி உள்ளார்.

சீதா ராமம், ஹாய் நான்னா என பேக் டு பேக் ரசிகர்களை வசீகரித்து வந்த மிருணாள் தாகூருக்கும் இந்த படத்தில் பெரியளவில் ஸ்கோப் இல்லை என்பது தான் ரசிகர்களை அப்செட் ஆக்கி விட்டது.

லிப் கிஸ் மட்டும் தான்: விஜய் தேவரகொண்டா ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய ஹீரோயின்களை புக் செய்து அவர்களுடன் லிப் கிஸ் அடிப்பது, படத்தின் புரமோஷன்களின் போது தூக்கி சுற்றுவது என ரொமான்டிக் பாயாகவே இன்னமும் சுற்றி வருகிறார். ஃபேமிலி ஸ்டார் படத்தில் மிருணாள் தாகூரின் வாயை அடைக்க வாயிலேயே முத்தம் கொடுக்கிறார். அந்த ஒரு சீனை தவிர இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி எங்கேயும் வொர்க்கவுட் ஆகவில்லை. அந்த முத்தக் காட்சியும் ஃபோர்ஸ் பண்ணி கொடுக்கும் சீனாகவே வைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அந்த காட்சியை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
நெகட்டிவ் விமர்சனங்கள்: முதல் பாதி படம் நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை வேறு ரூட்டுக்கு சென்றது தான் படத்தின் மைனஸ் என பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இரண்டாம் பாதியில் இயக்குநர் கதையில் விஜய் தேவரகொண்டா தலையிட்டு காட்சிகளை மாற்றி விட்டாரா? இயக்குநர் ஒரு புரிதலே இல்லாமல் படத்தை எடுத்து வைத்துள்ளாரே என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுவும் போச்சா: தொடர்ந்து சொதப்பி வரும் விஜய் தேவரகொண்டா இந்த முறையும் 100 கோடி வசூல் படத்தை கொடுக்க முடியாமல் திணறப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது. வெறும் 50 கோடி ஹீரோவாக ஹீரோயின்கள் நடிக்கும் படங்களே 50 கோடியை அசால்ட்டாக தாண்டி வரும் நிலையில், விஜய் தேவரகொண்டா தனது படங்களை வீணடித்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications