13 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் சாதனை.. இப்படியெல்லாம் யோசிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்!

Recommended Video

'ஒத்த செருப்பு' Golden Globe Award வாங்கும்-பார்த்திபன் பேச்சு-வீடியோ

சென்னை: தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் சாதனை.. இப்படியெல்லாம் யோசிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்.

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் இருவர் மட்டும். இதில் படம் முழுவதுமே 2 பேர் மட்டுமே நடித்திருந்தனர்.

தற்போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.

வித்தியாச தலைப்பு

வித்தியாச தலைப்பு

கோடிட்ட இடங்களை நிரப்புக தொடர்ந்து தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார் பார்த்திபன். படத்தில் இவரது கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

தனி சிறப்பு

தனி சிறப்பு

உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும் படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.

ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்

ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இத்திரைப்படம், சர்வதேச படத்திற்காட கோல்டன் குளோப் விருதிற்கும் போட்டியிடுகின்றது. முன்னதாக கடந்த 2006 -ம் ஆண்டு வெளிவந்த இருவர் மட்டும் படத்தில் அபய், சுனிதா வர்மா ஆகியோர் நடித்திருந்தனர்.

பழைய சாதனைப் படம்

பழைய சாதனைப் படம்

திருமணத்திற்கு பயந்து வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண் காட்டிலேயே வளர்ந்த இளைஞனை சந்திப்பது போலவும், அவனையே திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே தங்கி விடுவதே இப்படத்தின் கதை.

எப்படி இருக்குமோ

எப்படி இருக்குமோ

ஆனால் முழு படத்தையும் ஒரே கதாபாத்திரம் கொண்டு அமைத்திருப்பது சவாலான விஷயம். 5 நிமிட பாட்டிற்கே எழுந்து போகும் நம்ம ஊர் ரசிகர்களை 2 மணி நேரம் ஒரே முகத்தை பொறுமையாக பார்க்க வைக்க பார்த்திபன் என்ன யுக்தியை கையாண்டிருக்கிறார் என்பது படம் வெளியான பின்னர்தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X