“தப்பு மட்டும் தப்பிச்சிக்கிட்டே இருக்குது”: திகில் கிளப்பும் அருள்நிதியின் ‘டைரி’ ட்ரெய்லர்!
சென்னை: வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது 'டைரி' படத்தில் நடித்துள்ளார்.
அருள்நிதி நடித்துள்ள 'டைரி' படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் கமல், விக்ரம், பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
ஹாரர் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள 'டைரி' படத்தின் ட்ரெய்லர், படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

புதுமை நாயகன்
தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அருள்நிதிக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. புதுமையான, வித்தியாசமான கதைகளில் அதிகம் கவனம் செலுத்தும் அருள்நிதி, மெளனகுரு, டிமாண்டி காலனி போன்ற தரமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது தேஜாவு திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக 'டைரி' படமும் வெளியாகவுள்ளது.

ட்ரெய்லர் ரிலீஸ்
இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள 'டைரி' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியீடுகிறது. அருள்நிதியுடன் பவித்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், 'டைரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சிறப்பாக நடத்தியது. இதில்,நடிகர்கள் கமல், விக்ரம், பாலிவுட் ஹீரோ அமீர்கான் ஆகியோர் கலந்துகொண்டு, 'டைரி' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

மர்ம டைரி
சுமார் 2.27 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர், ஆரம்பம் முதலே திகில் கிளப்பும் வகையில் உருவாகியுள்ளது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் 13வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி விபத்துகள் நடக்க, அதன் பின்னணியி என்ன இருக்கிறது என்பதை துப்பறியும் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இது க்ரைம் திரில்லரா அல்லது ஹாரர் திரில்லர் படமா என்ற சஸ்பென்ஸையும், ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது.

போலீஸ் கேரக்டர்
அருள்நிதி இந்தப் படத்தில் கம்பீரமான போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். அவரது லுக்கும் பாடி மேனரிசமும் படத்திற்கு சரியாக ஒர்க் அவுட் ஆகும் என, ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் ட்ரெய்லரின் இறுதியில் அருள்நிதி பேசும், "ஏதோ தப்பு நடக்குது சார், ஆனா, அந்த தப்பு மட்டும் என்கிட்ட இருந்து தப்பிச்சிக்கிட்டே இருக்கு" என்ற வசனம், ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.

ஆகஸ்ட்டில் ரிலீஸ்
'டைரி' படத்தின் ட்ரெய்லரை பார்த்த அருள்நிதியின் ரசிகர்கள், நிச்சயம் படம் ஹிட்டாகும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அருள்நிதியின் கேரியரில் 'டைரி' திரைப்படம் சிறப்பான வெற்றியைத் தரும் எனவும், அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











