அண்ணனை கடுப்பேத்த ஒரே வழி...கார்த்தி வெளியிட்ட சிறு வயது ஃபோட்டோ
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர்கள் சூர்யா, கார்த்தி. சூர்யா நடித்த சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதே போன்று கார்த்தியின் சுல்தான் படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது. சுல்தான் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது குழந்தை பருவ, கல்லூரி பருவ ஃபோட்டோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் தனது மகனுக்கு கந்தன் என பெயரிட்டுள்ளதை அழகாக பதிவிட்ட கார்த்தியின் பதிவு, வைரலானது.
இந்நிலையில் தற்போது, தனது அண்ணன் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட சிறு வயது ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன், எனது அண்ணனை வெறுப்பேற்ற ஒரே வழி, அவர் அணிந்திருக்கும் சட்டையை போலவே நானும் அணிந்து கொள்வது தான். மீண்டும் அப்படி முயற்சி செய்ய ஆசையாக இருக்கிறது. நீங்களும் உங்கள் சகோதரர்களுடன் இப்படி ஒரே மாதிரி உடை அணிந்தது உண்டா? என பதிவிட்டுள்ளார்.
கார்த்தி பதிவிட்ட இந்த சிறு வயது ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











