Don't Miss!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் சேதுபதி பட டீஸருக்கு கிடைத்த அமோக வரவேற்பு: மகிழ்ச்சியில் படக்குழு #ONNPSTeaser
Recommended Video
சென்னை: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. டீஸரை பார்த்தவர்களுக்கு படத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும், நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions' 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ், கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
'' எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது. 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தோடு இனிதே தொடங்கலாம் . இப்படம் நிறையபேரின் நல்லாசிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.