'ஒன்னுமே புரியல'... உங்களுக்கு?
சென்னை: சத்தமே இல்லாமல் அடுத்த மாதம் ரிலீஸாகத் தயாராகி வருகிறது ஒன்னுமே புரியல படம்.
பேய் படங்கள் சக்கை போடு போடும் கோலிவுட்டில் தயாராகி வரும் சைக்கோ த்ரில்லர் படம் ஒன்னுமே புரியல. புதுமுகம் அப்சரா ராம்குமார் இயக்கும் இந்த படத்தில் அழகன் அழகி புகன் ஜாக் மைக்கேல், சைவம் பட புகழ் வித்யா பிரதீப் நடித்துள்ளனர்.
படத்தை நாக்அவுட் மூவீஸ் தயாரித்துள்ளது.

ரைஹானா
ஒன்னுமே புரியல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா இசையமைத்துள்ளார்.

டேம் 999
ஜாக் மைக்கேல் டேம் 999 படத்திலும், மொஹப்பத் என்னும் மலையாள படத்திலும் நடித்துள்ளார். டேம் 999 படத்தில் அவர் என்ஜினியராக நடித்தார்.

சென்னை
ஒன்னுமே புரியல படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடைபெற்றது.

கால்சென்டர்
கால்சென்டரில் நடக்கும் நிகழ்ச்சிகளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.எம்.ஆரில் பெரிய கால்சென்டரை கட்டியுள்ளனர். படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











