ஓ.என்.வி இலக்கிய விருது… வைரமுத்துக்கு கிடைத்த மற்றுமொறு கௌரவம் !

திருவனந்தபுரம் : கேரள அரசின் உயரிய விருதுதான ஒ.என்.வி இலக்கிய விருது கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒஎன்வி விருதுக்கு கேரளரல்லாத எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும்.

பிற மொழி எழுத்தாளர்களுக்கு

பிற மொழி எழுத்தாளர்களுக்கு

ஒ.என்.வி ஆண்டுதோறும் கேரளாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மறைந்த கவிஞர் ஓ.என்.வி.குரூப்பின் நினைவாக ஓ.என்.வி கலாச்சார அகாடமி வழங்கி வருகிறது. இவ்விருது மலையாளம் மற்றும் பிற இந்திய மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு சிலை, தகடு

ஒரு சிலை, தகடு

மலையாள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அனில் வல்லத்தோல், ஆலம்கோடு லீலகிருஷ்ணா மற்றும் பிரபா வர்மா ஆகியோர் அடங்கிய நடுவர் மன்றம் இவ்விருதை முடிவு செய்கின்றனர். இந்த விருது ரூ .3 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பரிசும், ஒரு சிலையும், தகடு வழங்கப்படும்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த விருது நேற்று அறிவிக்கப்பட்டது. ஒஎன்வி விருதுக்கு கேரளரல்லாத எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்த விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது.

இலக்கியம் பேசும்

இலக்கியம் பேசும்

ஓ.என்.வி இலக்கிய விருது பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்தில் இருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதைக் கருதுகிறேன்.மலையாளத்தின் காற்றும் தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணில் இருந்து பெறும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்று தான். இந்த உயரிய விருதினை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் மு.க ஸ்டாலின் என்னை பாராட்டினார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: vairamuthu award
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X