twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்!

    |

    சென்னை: நடிகர் விஜயகாந்த் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் வெளியான டாப் 5 படங்கள் குறித்து ஓர் பார்வை..

    Recommended Video

    Live: Premalatha Pampering Vijayakanth | Cute Love Video | Lock Down Diaries

    நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் பவர் ஃபுல் நடிகர்களில் ஒருவர் ஆவார். 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் விஜயகாந்த்.

    தொடர்ந்து ஹீரோவாக நடித்த விஜயகாந்த் பல பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்தார். கடந்த 2015ஆம் ஆண்டு வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து சேவை செய்யுங்கள் - விஜயகாந்திற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

    கேப்டன்..

    கேப்டன்..

    பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள நடிகர் விஜயகாந்துக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜயகாந்த்தின் படங்கள் அனைத்துமே தேசப்பற்று மிக்கதாகவும், குடும்ப பாசம் நிறைந்ததாகவும், ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் படங்களாக இருக்கும். நடிகர் விஜயகாந்தை அவரது ரசிகர்களும் நண்பர்களும் கேப்டன் என்று பாசத்தோடு அழைத்து வருகின்றனர்.

    இன்று பிறந்த நாள்

    இன்று பிறந்த நாள்

    விஜயகாந்த் நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பில் இருந்தபோதும் அந்த துறை வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். இன்று விஜயகாந்த் தனது 68 வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியான டாப் 5 படங்கள் குறித்து ஓர் பார்வை..

    ஊமை விழிகள்

    ஊமை விழிகள்

    முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு நடிகர் விஜயகாந்த் சினிமாவில் புதிய திறமைசாலிகளை ஊக்குவிக்க தொடங்கினார். அதற்கு சான்றாக, திரைப்பட கல்லூரி மாணவர்கள் தயாரித்த ஊமை விழிகள் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் விஜயகாந்த். 1986ஆம் ஆண்டு வெளியான இந்த படம் திரையரங்குகளில் 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தில் விஜயகாந்த், அருண் பாண்டியன், கார்த்திக், சந்திரசேகர், ஜெய் ஷங்கர். ரவிச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

    கேப்டன் பிரபாகரன்

    கேப்டன் பிரபாகரன்

    அடுத்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன்.. விஜயகாந்த் சினிமா கேரியரில் முக்கியமான படமாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது. விஜயகாந்தின் 100வது படமான இந்த படம் 1991ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ஃபாரஸ்ட் அதிகாரியாக பிரபாகரன் ஐஎஃப்எஸ் என்ற கேரக்டரில் நடித்தார் விஜயகாந்த். இந்த ஆக்ஷன் படம் பெரும்பாலும் காட்டில் படமாக்கப்பட்டது, இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியது. ஆர்.கே.செல்வமணி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

    சின்னக்கவுண்டர்

    சின்னக்கவுண்டர்

    அடுத்து சின்னக்கவுண்டர் திரைப்படம்.. 1992ஆம் ஆண்டு வெளியான இப்படம் கிராமத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆர்வி உதயக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜயகாந்த், சுகன்யா மனோரமா, சலீம் கோஸ், சத்யப்பிரியா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்த் ஒரு நேர்மையான கிராமத் தலைவராக நடித்திருப்பார். விஜயகாந்தின் சினிமா கேரியரில் பெரும் வெற்றியை கொடுத்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.

    வானத்தைப் போல

    வானத்தைப் போல

    அடுத்து வானத்தைப் போல.. 2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு குடும்ப சித்திரம் ஆகும். இதில் நடிகர் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மீனா, பிரபு தேவா, லிவிங்ஸ்டன், கவுசல்யா, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல், எமோஷன், ஆக்ஷன் என அனைத்தும் கலந்திருந்த இப்படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பல ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டது. விக்ரமன் இயக்கத்தில் வெளியான இப்படம் 250 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி சாதனைப் படைத்தது.

    ரமணா படம்

    ரமணா படம்

    அடுத்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படம். 2002ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்தார் விஜயகாந்த். இந்தப் படத்தின் மூலம் எந்த கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களை கவர முடியும் என்பதை நிரூபித்தார் விஜயகாந்த். பழிவாங்கும் நடவடிக்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றது. ரமணா படத்தில் ஊழலுக்கு எதிராக போராடினார். இந்தப் படம் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் மாநில விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vijayakanth celebrates his 68th birthday. From Oomai Vizhigal to Ramana his top films which received possitive reviews and hit in Box office also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X