ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: மலைகளின் அரசியை தமிழ் சினிமா கொண்டாடி தீர்த்தது போல மற்ற எந்தவொரு ஊரும் அந்த ஊரின் பெருமையை பாடல்கள் மூலம் காட்டியிருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஊட்டியில் ஜில்லென ஷூட்டிங் கிளம்பிச் சென்று படங்களை எடுத்து வந்த தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் அதன் அழகை அந்த காலத்தில் இருந்தே ரசித்து ஏகப்பட்ட பாடல்கள் மூலம் பெருமை சேர்த்துள்ளனர்.
பாடல்கள் மட்டுமின்றி அந்த காலத்திலேயே சிவாஜி கணேசன் 'ஊட்டி வரை உறவு' என 1967ம் ஆண்டே படம் வந்து விட்டது. முரளி, ரோஜா நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு 'ஊட்டி' என்கிற டைட்டிலிலேயே படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

"ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னம்மா" என தளபதி விஜய் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடாத ரசிகர்களே இருக்க முடியாது. ஊட்டிக்கு இந்த சம்மரில் டூர் போகும் பலரும் தங்கள் பிளே லிஸ்ட்டில் ஊட்டி வைபை கொண்டு வர தமிழ் சினிமா கொடுத்துள்ள ஊட்டி பெயர் வரும் பாடல்களின் ஒட்டுமொத்த லிஸ்ட்டை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஊட்டி மலை பியூட்டி: எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தளபதி விஜய், சிம்ரன் நடிப்பில் வெளியான ஒன்ஸ் மோர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ஊட்டி மலையின் பியூட்டியையே பாடல் வரிகளாக கொண்டு உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தேவா இசையில் மனோ, ஸ்வர்ணலதா பாடிய "ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னம்மா.. அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா" பாடல் இன்றளவும் ஊட்டி என்றதுமே ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலாக உள்ளது.
ஊட்டி மலை ரோட்டினிலே: 1993ம் ஆண்டு வெளியான பொன் விலங்கு படத்தில் இளையராஜா இசையில் வாலி வரிகளில் மலேசியா வாசுதேவன் பாடிய "ஊட்டி மலை ரோட்டினிலே" பாடலும் ரசிகர்களை ரொம்பவே கவனம் ஈர்த்த பாடலாக பல வருடங்களாக இளையராஜா ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
தொட்டபெட்டா மலைமேல: ஊட்டியை வைத்து மற்ற நடிகர்களை விட தளபதி விஜய் அதிக பாடல்களை கொடுத்திருக்கிறார். விஜய், சங்கவி நடித்த விஷ்ணு படத்தில் தேவா இசையில் தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் இணைந்து விஜய் பாடிய "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா" பாடலும் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலையை குறிக்கும் பாடல் தான். "இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்" என்றெல்லாம் இந்த பாடலில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டிக்கு டிக்கெட் வாங்கட்டா: சுந்தர். சி இயக்கத்தில் கார்த்திக், நக்மா நடிப்பில் வெளியாகி கவுண்டமணி காமெடியில் கலக்கிய மேட்டுக்குடி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "வெல்வட்டா வெல்வட்டா" பாடலில் "ஊட்டிக்கு டிக்கெட் வாங்கட்டா" என்கிற வரிகள் இடம்பெற்ற உடனே ஹனிமூனுக்கு பலரும் ஊட்டிக்கு போக டிக்கெட் போட ஆரம்பித்து விட்டனர்.
என் சொந்த ஊரு ஊட்டி: மீண்டும் இன்னொரு ஊட்டி பாடலும் விஜய் படத்தில் இருந்து தான் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய், அசின் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் இடம்பெற்ற "என் செல்லப்பேரு ஆப்பிள்" பாடலில்.. "என் செல்லப்பேரு ஆப்பிள் நீ சைஸா கடிச்சிக்கோ.. என் சொந்த ஊரு ஊட்டி என்னை ஸ்வெட்டர் போட்டுக்கோ" என்றும் ஊட்டியை குறிக்கும் வரிகள் இடம்பெற்றிருக்கும். உங்களுக்கு தெரிந்த ஊட்டி பாடல்களையும் கமெண்ட் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications











