சினிமாவை விட்டுவிலக.. சிம்பு படத்தில் நடந்த கசப்பான அனுபவம் தான் காரணம்.. மனம் திறந்த நடிகை!
சென்னை : சினிமாவை விட்டு விலக சிம்பு படத்தில் நடந்த கசப்பான அனுபவம் தான் காரணம் என நடிகை கூறியுள்ளார்.
சிம்பு புது உத்வேகத்துடன் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் பிரபல நடிகை இப்போது கூறியிருப்பது சினிமாவில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிலம்பரசன். சிம்புவின் சினிமா பயணம் முடிந்தது, இனி சிம்பு சினிமாவுக்கு செட்டாக மாட்டார் என எழுந்த அனைத்து வதங்களையும் சிம்பு தற்போது தவுடுபொடியாக்கிஉள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாக மாநாடு திரைப்படத்தில் கம்பேக் கொடுத்து அனைவரையும் வாய்பிளக்கவைத்தார்.

வெந்து தணிந்தது காடு
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார். கெளதம் மேனன் சிம்பு, ரஹ்மான் கூட்டணி என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தை வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை லேக்கா வாஷிங்டன்
இந்நிலையில், நடிகை லேக்கா வாஷிங்டன் அளித்துள்ள பேட்டியில், சிம்பு படத்தில் நடந்த கசப்பான அனுபவம் தான் காரணம் கூறியுள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான கெட்டவன் படத்தில் லேக்கா வாஷிங்டன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அப்படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது. எனவே அந்த படத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களினாலே தான் சினிமாவை விட்டு விலகியதாக லேக்கா வாஷிங்டன் தெரிவித்துள்ளார். லேக்கா வாஷிங்டன் திருமணம் செய்து கொண்டு மும்பையில் சிற்பக்கலை கலைஞராக பணிபுரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











